Re:... posted bySHEIKH ABDUL QADER (RIYADH)[04 November 2014] IP: 5.*.*.* | Comment Reference Number: 38001
அஸ்ஸலாமு அலைக்கும் வரமத்துல்லாஹி வபரக்காத்துஹு.
இறைவனுக்கே எல்லாப்புகழும்.
அன்றுமுதல் இன்றும் என்றுமாக ஒரு ஒட்டுண்ணியாகி மனிதவாழ்வில் ஒருவிஷக்கிருமியாக (வைரஸாக) உருவெடுத்து வாட்டிவதைக்கும் வட்டிஎனும் கொடுங்கோலனை ஒழிக்க ஜன்சேவா போன்ற இயக்கங்களை ஆதரித்து இணைந்து பங்குதாரராகவோ வைப்பீட்டாளராகவோ ஆக்கம்செய்துகொள்வது சமுதாயத்தை வீழ்ச்சி சூழ்ச்சிகளிலிருந்து காப்பாற்ற வழிவகைசெய்யும் இன்ஷா அல்லாஹ் தற்காலத்தில் தலைவிரித்தாடி எல்லா சமூகத்தினரையும் திக்குமுக்காடச்செய்துகொண்டிருக்கிறது வட்டியும் அதன் குட்டிச்சாத்தான்களும், கைகொடுக்கும் கையில்லாமல்தானே கைகெடுக்கும் கைகள் உயர்ந்தவளர்ந்திருக்கிறது. மார்க்கம் வன்மையாகத்தடைசெய்த வட்டியானது இன்று உலகெங்கும் தடையின்றி வளர்ந்திருக்கிறது.
இதை நியாயப்படுத்த ஆடுனனைகிறது ஓநாய் அழுகிறதென்று மூக்குவியர்த்து ஆதரித்து ஆதாயம்தேடும் வஞ்சகநரிக்கூட்டங்கள். ஜன்சேவாபோன்ற நல்ல இயக்கங்களை தடைசெய்ய வரிந்துகட்டிகொண்டு களமிறங்கியிருக்கின்றன, அவற்றில் சில முகத்திரைகிழித்து முத்திரையிடப்பட்டுவிட்டன. அல்ஹம்துலில்லாஹ்."ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு", நமதுமானமும் மரியாதையும் வாழ்வாதாரமும் தட்டில்வைத்துக்கூறப்படாமல், நம்மைநாமே காத்துக்கொள்வோம்
வல்ல இறைவன் நம்மையும் நமது சமுதாயத்தையும் உலகமனிதவளத்தையும் அவனுடைய நேரானவழியில் காத்தருள்புரிவானாக ஆமீன்.
"ஒருகாலம்வரும் அப்பொழுது அனைவரிடமும் பொன்னும் பொருளும் மலிந்திருக்கும்"
அந்தவேளையில் நாம் என்னதான் முயன்றாலும் தர்மமென்ற பகுதியிலிருந்து அணுவளவும் ஆதாயம் பெற்றுக்கொள்ளமுடியாது அந்தகாலம் வெகுதூரமில்லை அதற்கான அடையாளங்கள் வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. வல்ல இறைவன் அதற்குமுன் நமகுத்தந்திருக்கும் இந்த ஈடில்லா பொன்னான காலத்தை பயன்படுத்திக்கொள்வதோடு அவனுக்கு நன்றியோடு செயலில் இறங்குவோம் இன்ஷா அல்லாஹ் வெற்றியத்தர அவனே போதுமானவன் அல்ஹம்துலில்லாஹ்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross