Re:...ஒரு ஊர்லே ரண்டு ராஜா .. posted bymackie noohuthmbi (kayalpaattinam)[15 November 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 38158
வார இதழ்களில் தரமானது புதிய தலைமுறை.
நாளிதழ்களில் தலையானது தி இந்து தமிழ்.
சமீப காலங்களில் ஊடகங்களின் தாக்கம் வெள்ளித்திரை சின்னத்திரை வார இதழ்கள் நாளிதழ்கள் என்று அதிகம் பேசப்படுகிறது. ஆட்சி மாற்றங்கள் அதிரடியாக ஏற்படவும் இளைஞர்களின் எண்ண ஓட்டத்தை வெளிக் கொண்டு வரவும் இவை பெரிதும் பங்காற்றுகின்றன.
முகம் சுளிக்கும் காட்சிகள் வெள்ளி திரையில் இருந்தாலும் அதில் சில நல்ல கருத்துக்களும் சமூக மாற்றத்துக்கான விதைகளும் ஊன்றப் படுகின்றன. மேலே சொன்ன இதழ்களை வாங்கிப் படித்து பழக்கப் பட்டவர்களுக்கு இது புரியும்.
அந்த இதழ்களில் சினிமா விமர்சனங்களை பார்த்து விட்டு தைரியமாக அவர்கள் சொல்லும் படத்தை பார்க்கலாம். காய்தல் உவத்தலின்றி உள்ளதை உள்ளபடி விமர்சிக்கிறார்கள். அந்த இதழ்களில்தான் காயல்பட்டினம் பற்றி ஒரு ஊர்லே ஒரு ராஜா தரும் செய்தியை வெளியிட்டிருந்தார்கள். இந்த இணையத்தளம் நன்கு அதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.
நமது ஆதங்கம் ஆசை எல்லாம் இப்படி சாவுகள் நிகழ வேண்டும், தொழிற்சாலை அதிபர் விபத்தை சந்தித்து உயிர் பிழைத்தபின் தன் தவறை உணர்ந்து தன் தொழிற்சாலையில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லை. ஏனெனில் சாவுகள் இங்கே சாதரணமாகி விட்டன..அவர்கள் தொழிற்சாலை அமைந்துள்ள ஊர் பெயரே சாவுபுரம் தான். தெரிந்தோ தெரியாமலோ அந்த பெயர் இப்போது பொருந்தி வருகிறது.
"ஆணியாக பிறந்தாய் உனக்கு அடிகள் புதிதில்லை" என்று "லிங்கா"வில் சூப்பர் ஸ்டார் ஒரு வசனம் பேசுகிறார்.படமே வெளிவரவில்லை அதற்கிடையில் இவனுக்கு எப்படி இந்த வசனம் தெரியும் என்று நினைக்காதீர்கள். இதுவும் ஒரு ஊடகத்தின் தகவல்தான்.
எனவே புற்று நோய் சாவுகள் எங்களுக்கு புதிதல்ல, அல்லாஹ் தரும் நோய் என்றால் அதை பொறுமையுடன் ஏற்றுக் கொள்ள எங்கள் இதயம் பக்குவப் பட்டுவிட்டது. ஆனால் ஒரு சாதாரண தொழிற்சாலை அதிபர் இந்த நோயை நம் ஊர் எல்லையில் இருந்துகொண்டு, நமதூருக்கே வரி செலுத்திக் கொண்டு, நமதூரில்லுள்ளவர்களை கையில் போட்டுக் கொண்டு, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டு, நமக்கு அவற்றுக்கு கைமாறாக, நன்றிக் கடனாக இந்த புற்று நோயை இலவசமாக தருகிறாரே அதைத்தான் நம்மால் ஜீரணிக்க முடியவில்லை.
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். தொடர்ந்து இந்த ஆலையை எதிர்த்து பல கோணங்களில் இருந்தும் போராட்டம் நடத்த புற்றீசல்கள் போல் பல இயக்கங்கள் புறப்பட்டு விட்டன.
"எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாகக் கண்டே. பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு"
என்ற பாரதிதாசன் வைர வரிகளை தாரங்கதாரவிலிருந்து வந்திருக்கும் தொழில் அதிபர்களுக்கு ஞாபக மூட்டுகிறோம்.பதுங்கும் புலி பாயக் கூடும் கவனமாக இருங்கள். நீங்கள் திருந்தா விட்டால் - ஒரு ஊர்லே ரண்டு ராஜா போல் நீங்கள் அடிபட்டு திருந்த நாள் குறிக்க வேண்டாம் -
இப்போதே குறித்து வைத்து கொள்ளுங்கள், DECIDE TO MAKE CHANGES IMMEDIATELY OR YOU WILL BE FORCED TO DECIDE YOUR FUTURE . இதை.நான் சொல்லவில்லை. புற்று நோயால் தினம் தினம் மாண்டுகொண்டிருக்கும் எங்கள் சகோதர சகோதரிகளின் சொந்தங்கள் சூளுரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.
சுனாமி சொல்லி விட்டு வராது - எரி மலை உங்களிடம் சம்மதம் கேட்டுவிட்டு வெடிக்காது. ஜாக்கிரதை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross