நச்சு ஆலை ஆட்டம் கொள்ள ஆரம்பித்து விட்டது! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[15 November 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38162
திரைப்பட தாக்கத்தினால் விளையும் எந்த நன்மை தீமைகளையும் அலசிப்பார்க்க நம் மார்க்கம் அனுமதிப்பதில்லை என்ற நம்பிக்கையை வாழ்க்கையாக ஏற்று வாழும் நாம்,சற்று விலகிச்சென்று ஊடககங்களின் பார்வையை பார்க்கும் பார்வையாளர்களாக அது கூறும் உண்மை யதார்த்தத்தை மட்டும் எடுத்துக்கொண்டு,அந்த மையக்கருத்தை மற்றவர்களுக்கு முறையாக எடுத்து விளக்குகின்ற பணியை செய்வதில் தவறேதுமில்லை!
பாத்திரத்தைப்பார்க்காமல் அதிலுள்ள பண்டத்தைமட்டும் எடுத்துக்கொள்வதுபோல்,"எப்பொருள் யார் யார் வாய்
கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு"
என்ற வள்ளுவன் மொழிக்கொப்பவும், நம்முடைய சீரிய பணியான,நம்மை சீரழிக்கும் அந்த நச்சு ஆலையை அனைத்து வழிகளிலும், எதிர்கொண்டால்தான் அந்த இரும்பு நிர்வாகத்தை இலேசு,இலேசாக அசைக்க வைக்க முடியும்!
வல்ல அல்லாஹ்வின் உதவியால் அது அசையும் நிலை ஆரம்பமாகிவிட்டது.ஆமாம், அனைத்து தரப்பினர்களும் அந்த ஆலைக்கெதிராக ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பரிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்கின்ற அறிகுறியில் ஒன்று தான் SDPI அமைப்பின் டிசமபர் 30-ன் போராட்டம்!
SDPI அமைப்புக்கு என் நன்றிகலந்த வாழ்த்துக்களை தெரிவிக்கும் அதேவேளையில்,இப்புண்ணிய பணிக்காக அல்லும் பகலும் பாடுபடும் தியாகச்செம்மல்கள் செழுமி இருக்கும் அமைபாம் KEPA அமைப்போடு அனைத்து ஆலோசனைகளையும் பகிர்ந்துகொண்டு அவர்களுக்கும் பக்கபலமாகவும் செயல்படுமாறு அன்புடன் வேண்டுகிறேன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross