Re:...காயல்பட்டினம் நகராட்சி posted byISMAIL SUFI (Kayalpattinam)[15 November 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 38164
அஸ்ஸலாமு அலைக்கும்.
காயல்பட்டினம் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ் அவர்கள் மழைக்காலத்தில் மேற்கொள்ளவேண்டிய முன்நெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். பொது நலன் கருதி வெளியிட்டுள்ள அறிக்கையை நாம் யாவரும் கவனித்து செயல்படவேண்டும்.
அதே நேரத்தில் மிகவும் பொறுப்புள்ளவர்கள் கவனிக்க வேண்டிய சில விசயங்களையும் அவர்கள் (சுகாதார ஆய்வாளர் மற்றும் கமிஷனர்) கவனத்தில் கொள்ளவேண்டும். நமதூர் நகராட்சிக்கு மிக அருகில் நகராட்சிக்கு எதிரில் மழை நீரும் குப்பைகளும் தேங்கி இருப்பதை நாம் காண முடிகிறது. மேலும் தண்ணீர் திறப்பதற்குரிய சேனல்கள் இருக்கும் தொட்டிகள் பல வருடங்கள் திறந்தே உள்ளது. அதுவும் நகராட்சிக்கு மிக அருகில். இந்த தொட்டிகளில் எல்லாம் மழை நீர் தேங்கி கிடக்கிறது. மேலும் ஆடு, மாடு, குழந்தைகள் தவறி விழ வாய்ப்பு இருக்கிறது. யாருமே இதை கண்டு கொள்வதில்லை.
மேலும் ஹோட்டல்களில் உணவுப் பண்டங்கள் எப்போதும் திறந்தே கிடக்கிறது.
சம்சுதீன் ஹோட்டல் உள்பட எல்லா ஹோட்டல்களிலும் ஈ, கொசு தாரளமாக காணக்கிடைகிறது. சுகாதார ஆய்வாளர் ஒருநாள் கூட ஆய்வு செய்த மாதிரி கேள்விப்படவே இல்லை.
அவருடைய பணி Sanitary Inspector ஊரில் உள்ள தெருக்கள் மற்றும் உணவுப் பொருள் விற்பனை செய்யும் இடங்களில் இன்ச்பெக்ஸன் செய்து சுகாதாரமாக உள்ளதா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி அவர் நடவடிக்கை எடுத்தால் ஊர் எப்போதும் சுகாதாரமாக இருக்கும். இனிமேலாவது நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிக்கை வைப்போம்.
பொதுமக்கள் நலன் கருதி எழுதியவர்
இஸ்மாயில் சூபி
காயல்பட்னம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross