Re:...வெள்ளி திரையும் சின்ன திரையும் கணினித்துறையும் செய்த மாற்றங்கள் posted bymackie noohuthmbi (kayalpaattinam)[17 November 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 38180
பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு உன் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன். கண்ணதாசனிடம் கவிதை என்ன புதிதா கமலஹாசனிடன் கிஸ்ஸு என்ன புதிதா..கிஸ்ஸு என்றால் உதடுகள் விரியும் தமிழ் முத்தம் என்றால் உதடுகள் இணையும்....
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும் குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டு. குமரிப் பெண்ணின் கைகளிலே ஆசை நெஞ்சை தரவேண்டும் ஆசை நெஞ்சை தந்துவிட்டு குடியிருக்க நீ வரவேண்டும்....
இந்த பாடல்கள் வெள்ளி திரையில் வரும்போது எனக்கு வாலிப வயது....அப்போதே ஆரம்பித்து விட்டது இந்த கலாசார சீரழிவு. அப்போது அதிகமாக தொட்டுப் பேசமாட்டார்கள் அரை குறை ஆடை அணியமாட்டார்கள். ஆனால் தொட்டுப் பேசுவதும் முத்தம் கொடுப்பதும் அரை குறை ஆடை அணிவதுமே இப்போதுள்ள வெள்ளித்திரைக்கு மவுசு.
"கத்தி" வசூல் கோடி ரூபாயை தாண்டுகிறது. மது வசூல் 125 கோடியை தாண்டுகிறது. விபசார விடுதிகள் சட்டப் படி இயங்குகின்றன. பாலியல் பலாத்காரங்கள் கௌரவ கொலைகள் தற்கொலைகள் கொள்ளைகள் கண்டுகொள்ளப் படாமல் நீக்கமற நிறைந்துள்ளது. அதற்கான தண்டனைகள் நிறைவேற்று அதிகாரம் இல்லாமல், சரியான சாட்சியங்கள் இருந்தாலும் அரசியல் அங்கே நுழைந்து அவற்றை புஸ்வாணமாக்கி, குற்றவாளிகள் மீண்டும் அவர்கள் தொழில்களை மும்முரமாக நடத்துகிறார்கள்.
சகோதரர் முஹம்மது அலி அவர்கள் காவல் துறையில் பணியாற்றியவர்கள். அவர்களுக்கே தெரியும் குற்றவாளிகளை காவல் துறை அணுகும் விதம். இப்போது காவல் துறையே களங்கம் மிக்கதாக இருக்கிறது. மங்கை சூதகமானால் கங்கையில் நீராடலாம் கங்கை சூதகமானால் எங்கே நீராடுவது.
பாலியல் பற்றி நமது முன்னோர்கள் பாடமா நடத்தினார்கள். காதலிப்பது பற்றி கல்லூரியிலா கற்றுக் கொடுத்தார்கள். சொல்லி தெரிவதல்ல மன்மதக் கலை என்பது போல் அதெல்லாம் காலப் போக்கில் வந்து கொண்டிருந்தது. வாழ்க்கை நிம்மதியாக, பொறுமையாக போய்க் கொண்டிருந்தது. ஆங்காங்கே சில மணமுறிவுகள் நிகழ்ந்தன. பெரியவர்கள் தலை இட்டு அதையும் கூட இல்லாமல் ஆக்கினார்கள். பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று புறப்பட்ட ஒரு கூட்டம் இப்படி கேடு கெட்டு அலைய ஆரம்பித்தது.
இஸ்லாம் மிக தெளிவாக வாழ்வியல் தத்துவங்களை சொல்கிறது. நபிகள் நாயகம் 11 மனைவியர்களுடன் அற்புதமான வாழ்க்கை வாழ்ந்து காட்டினார்கள். திருமறையில் மணவாழ்க்கையின் அற்புதங்கள் பற்றி சொல்லப் பட்டிருக்கிறது. நபி வழியில் திருமண பந்தங்கள் சொந்தங்கள் வாழ்க்கையை ரசனையுடன் வாழ்வது எப்படி என்பதை எல்லாம் கோடிட்டு காட்டி இருக்கிறது. மனைவியுடன் உடலுறவு கொள்வதே ஒரு இபாதத் என்று நபிகள் நாயகம் சொல்லி இருக்கிறார்கள். முத்தங்களின் அவசியத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள்.
ஒழு செய்துவிட்டு கூட ஆயிஷா நாயகி அவர்களை அணைத்திருக்கிறார்கள் என்று ஒரு நபி மொழி இருக்கிறது. ஆனால் இவை எல்லாம் விரசம் கெட்டு வெட்ட வெளியில் மற்றவர்களும் பார்த்து மகிழும் சல்லாபமாக மாற்றியது மேலை நாட்டு நாகரிகம். அவை எல்லை மீறி நம் நாட்டிலும் காலூன்ற வெள்ளி திரைகள் கோடுபோட்டுக் கொடுத்தன. அவற்றுக்கு ரோடு போட்டுக் கொடுத்தன இணையதளங்கள். நவீன வசதிகள் வாட்ட்ஸ் அப், செல்பி போன்றவை செங்கம்பளம் விரித்து நம் இளைஞர்களை அதனுள் சிக்க வைத்துள்ளது. NET மிக சரியாக பெயர் வைத்திருக்கிறார்கள். அந்த வலைக்குள் அகப்படாமல் எந்த மீனும் எந்த இளைஞனும் இளைஞியும் தப்ப முடியவில்லை. முகநூல், ட்விட்டர் என்று அதன் பரிணாமம் நீள்கிறது. இது எங்குபோய் முடியப் போகிறதோ. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
குறைந்த பட்சம் அல்லாஹ்வின் திருமறையையும் நபிகள் நாயகத்தின் வழிமுறையையும் கையில் வைத்துள்ள முஸ்லிம் இளைய சமுதாயம் இந்த பிடியிலிருந்து வெளியேறி ஒழுங்கான நெறிமுறையில் வாழ து ஆ செய்வோம். அதற்கான வழிமுறைகள் விழிப்புணர்வு கட்டுரைகள், திறந்தவெளி பிரசங்கங்கள் நம் உலமாக்களால் ஆங்காங்கே நடத்தப் படவேண்டும். சில்லறை பிரச்சினைகளை பேசி உள்ளங்களை காயப் படுத்தி சமுதாயத்தை பிரிக்கும் சூழ்சிகள் மாறி இப்படி புதிய கோணத்தில் இளைஞர்களை ஒன்றிணைக்க வேண்டும்.
முஹம்மது அலி அவர்கள் கட்டுரை நீண்டு விட்டது என்றாலும் பொறுமையாக படிப்பவர்களுக்கு உண்மை உறைக்கும் தெளிவும் பிறக்கும்.
உங்களைக் கொண்டு ஒரு மனிதன் நேர் வழி பெற்றால் அது இந்த உலகம் அதில் உள்ள அனைத்தையும் விட உங்களுக்கு நற்கூலி தேடி தரும் என்று நபிகள் நாயகம் கூறி இருக்கிறார்கள். அல்லாஹ் தவ்பீக் செய்வானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross