Re:.இளமை - இனிமை - புதுமை - முதுமை posted bymackie noohuthmbi (kayalpaattinam)[17 November 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 38179
கால சக்கரத்தின் சுழற்சியை சாளை பஷீர் அவர்கள் தெளிவாக நம் மனக்கண் முன் கொண்டு வந்துள்ளார்கள்.. அதன் நியாய சாட்சியாக ஒரு ஜப்பானிய திரைப் படத்தையும் இங்கே ஓட விட்டிருக்கிறார்கள்.
ஆனால் அல்லாஹ்வின் திருமறையையும் நபிகள் நாயகத்தின் வழிமுறையையும் பின்பற்றி வாழ்கிறவர்களுக்கு இந்த சுழற்சிகள் வெறும் சாதரணமான நிகழ்வுகளே.
அனாதைகளை ஆதரிக்க சொல்லும் அல்லாஹ்வும் ரசூலும் வயதான பெற்றோர்களை அரவணைத்து செல்லவும் அதற்கான வழி முறைகள், அப்படி செய்வதால் நமக்கு கிடைக்கும் இம்மை மறுமை நன்மைகள் எல்லாம் தெளிவாக விரிவாக இறைமறையிலும் நபிமொழி நூல்களிலும் சொல்லப்பட்டுள்ளன . அவற்றை நடை முறைப்படுத்தி வாழ்ந்த நபி, அவர்கள் தோழர்கள் வாழ்வியல்களிலும் கொட்டிக் கிடக்கின்றன.
சோதனைகள் வேதனைகள் மனைவி மக்கள் செல்வம் ஆட்சி அதிகாரம் இவை எல்லாமே அவர்கள் உள்ளங்களை உறுதியை அசைத்துப் பார்த்து தோல்விதான் கண்டுள்ளன. ஆனால் நமது வாழ்க்கை முறை இவற்றுக்கு மாறாக சென்று விட்டதாலும் திருமண மேடைகளில் ஒரு சம்பிரதாய முழக்கமாக - மரண வீடுகளில் அந்த நிகழ்ச்சிகள் வெறுமனே ஓதப்படும் சடங்குகளாக மாறிவிட்டதாலும் ஒரு வெறுமை - ஒரு சில தினகளுக்கு அல்லது ஒரு சில திங்களுக்கு மட்டுமே நம்மிடம் ஏற்பட்டு, மீண்டும் பழைய நிலைக்கு நாம் சென்று விடுகிறோம்.
இளமையை நாம் அனுபவிக்க ஆசைப் படுகிறோம்.அந்த இளமை தரும் இனிமை - சுகம் அவற்றை முழுமையாக சுவைத்து விட விரும்புகிறோம்.அதுவும் புதுமை நிறைந்த இந்த கால அறிவியல் வளர்ச்சியின் அதி நவீன வசதிகளுடன் வாழ்ந்து பார்க்க நம்மை தயார்படுத்திக் கொள்கிறோம் . இவ்வளவும் வெற்றிகரமாக நடந்து முடியும் போது இரவாகி விடுகிறது - ஆம் நாம் கண்ணுறங்கும் நேரம். அது முதுமையின் ஆரம்பம். விடியும்போது வாழ்வின் முடிவு ஆரம்பமாகி விடுகிறது. இப்போது நீங்கள் ஆரம்பத்தில் சொன்ன வெறுமை நம்மை ஆட்கொள்கிறது.
எனவே இப்போதே இஸ்லாத்தின் வாழ்வியல் உண்மைகளை திருமறையின் வெளிச்சத்தில் திருநபி வழிமுறையின் அடிச்சுவட்டில் தடம்பதித்து நமது வாழ்க்கையை ஆரம்பிப்போம்.
LA QADH KAANA LAKUM FEE RASOOLILLAHI USVATHUN HASANAA... நிச்சயமாக அல்லாஹ்வின் ரசூல் அவர்களிடத்தில் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது...
அல்லாஹ்வின் திருமறை ஆழமாக நம் உள்ளங்களில் பதிவு செய்கிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ் வாழ்வின் எல்லா கோணங்களிலும் நாம் இந்த வைர வரிகளைப் பின் பற்றி அந்த நபியின் வாழ்வை பின்பற்றி வாழ்ந்து ஈருலகிலும் வெற்றி வாழ்க்கை வாழ்பவர்களாக ஆக்கி வைப்பானாக ஆமீன்.
சாளை பஷீர் அவர்களின் தமிழை ரசிக்கிறேன். சிந்தனை ஓட்டத்தை நேசிக்கிறேன். அல்லாஹ் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் அருளும்படி அல்லாஹ்வை யாசிக்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross