சமூக மாற்றத்தை நோக்கி... posted bySalai.Mohamed Mohideen (Philly)[18 November 2014] IP: 50.*.*.* United States | Comment Reference Number: 38182
சமூக மாற்றத்தை நோக்கி பயணிக்கத் தூண்டும் அழகான ஆழமான பதிவு.
ஷாப்பிங் முடித்து விட்டு பணம் கட்டும் இடத்திற்கு வந்த பொழுது, எங்களை நோக்கி வந்தனர் ஒரு வயதான தம்பதியினர். இந்த சிறு அன்பளிப்பை (விளையாட்டு பொருள்) உங்களுடைய மகனுக்கு நாங்கள் தரலாமா என்றனர். ஏன் என்றேன்? நீங்கள் கடைக்குள் நுழையும் போது எங்களை நோக்கி உங்கள் மகன் எங்களை பார்த்து புன்னகைத்தான். அது எங்களுக்கு மகிழ்ச்சியை தந்தது என்றனர்.
இது நடந்து மூன்றரை வருடங்கள் ஆகின்றது. இக்கட்டுரையை படித்தவுடன் இந்த சம்பவம் தான் ஞாபகத்துக்கு வருகின்றது. ஒரு மழலையின் புன்முறுவல்களுக்கு கூட முதியவர்கள் இந்நாட்டில் ஏங்கி தவிக்கின்றனர்.
வயதான காலத்தில் தாங்கள் பெற்றெடுத்த பிள்ளைகளுடன் வசிக்கும் வாழ்வுமுறை (தங்களை பராமரிக்க பிள்ளைகள் உடன் இல்லாததால்) தங்களுடைய வீடு / சொத்துக்களை விற்று விட்டு முதியவர்களை பராமரிக்கும் (கட்டணம் வாங்கி) இல்லங்களில் (Senior Homes) தனிமையில் கடத்த வேண்டிய கட்டாயத்தில் முதியவர்கள்.
இது போன்ற மேலைநாட்டு வாழ்வுமுறை நமது நாடுகளிலும் பரவலாக ஊடுருவ ஆரம்பித்து விட்டது. ஒரே ஒரு வித்தியாசம்... பெற்று வளர்த்த கடனுக்கு பராமரிப்பகத்தின் செலவுத் தொகையை பொறுப்பேற்று கொள்கின்றனர் பிள்ளைகள்.
முதுமையின் தனிமைக்கு நமதூரிலேயே உதாரணங்களை கூறிவிடலாம். நண்பர் கனடாவிலும் அவர் சகோதரி கத்தரிலும் தம்பி டெல்லியிலும்... தனது மனைவியை இழந்த நண்பரின் தந்தை 'பாரம் நிறைந்த தனிமைக் கூட்டுக்குள்' காலம் தள்ளி வருகின்றார். தங்களின் கடைசி காலத்தை பாஷை தெரியாத பல்வேறு சீதோஷநிலைக்குட்பட்ட, தனிமையை (Privacy) சீர்த்தூக்கி பிடிக்கும் அந்நிய மண்ணில் கழிக்க வயோதிக பெற்றோருக்கு மனம் இடம் தருவதில்லை. கார்ப்பரேட் அள்ளி தந்த பொருளாதாரத்தை, 'வெளிநாட்டில் வசிக்கின்றோம்' என்ற பெருமையை / அடையாளத்தை விட்டு தர பிள்ளைகளுக்கும் விருப்பமில்லை. இது தான் நிதர்சனமான உண்மை.
நமது சமுதாயத்தில் கல்வி பரவலாகிய பின் தொழில் முனைவோர், வணிகர்கள் என்ற வர்க்கமே மறைந்து போய்விட்டது என்பது நூற்றுக்கு நூறு உண்மை. இதனை ஒரு முறை KCGC யின் கூட்டத்தில் கலந்து கொண்ட போது பதிவு செய்து... இந்த இடைவெளியை போக்க (உள்நாட்டிலேயே பொருளீட்டும் வண்ணம் ) 'entrepreneurship' தொழில் முனைவோர் தொடர்பான நிகழ்சிகளை நடத்துங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.
" வாழ்க்கை என்பது எறிந்தவனை நோக்கியே திரும்ப வரும் பூமராங் ஆயுதம் போன்றது" - இதனை நாம் கண்கூடாகவே பார்த்து வரும் நூற்றுக்கு நூறு உண்மையான கூற்று. இதற்கு ஒரு குட்டி கதை தான் ஞாபகத்துக்கு வருகின்றது.
தங்களோடு ஒன்றாக டைனிங் டேபிளில் உணவருந்தி வந்த தன் பாட்டிக்கு, தன் தாய் வயோதிகத்தினால் சோற்று பருக்கைகளை சிந்துகின்றார், மெலமன் ப்ளேட்- க்களை ஒடைத்து விடுகின்றார் என்பதற்காக... கொட்டாங்குச்சியில் ஆன உணவு பாத்திரத்தில், தனியறையில் (மூலையில்) உணவு தருவதை பேரன் உள்வாங்கி வந்தான்.
ஒருநாள் வீடு திரும்பிய அவனின் தந்தை, தன் மகன் தோட்டத்தில் கொட்டாங்குச்சியை வைத்து எதோ தட்டு , கிண்ணம் செய்வதை ஆச்சர்யமுடன் கண்டு... என்ன செய்து கொண்டிருக்கின்றாய் என்றார்?
பாட்டியை போன்று நீங்களும் முதுமையை அடைந்த பின்னர்... நீங்கள் உணவருந்துவட்காக இப்பொழுதே இவைகளை நான் தயார் செய்து கொள்கின்றேன் என்றான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross