செய்தி: நகரில் தேங்கும் மழை நீர் வழிந்தோட நிரந்தரத் தீர்வு கோரி இ.யூ.முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில், நவ. 22 அன்று அனைத்துக் கட்சிகள் நடத்தும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கிண்டல் செய்வது எனது நோக்கமல்ல! ஆதங்கத்தையே வெளிப்படுத்துகிறேன்!! posted byHameed Rifai (Jeddah (ksa))[21 November 2014] IP: 5.*.*.* | Comment Reference Number: 38208
பொதுவாழ்வில், விமர்சனங்களுக்கு முகம் கொடுத்து விளக்கமளிப்பதே வரவேற்கத்தக்க பண்பு. அந்த அடிப்படையில், சகோதரர் இப்றாஹிம் மக்கி அவர்களின் விளக்கத்திற்கு முதலில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“இது யாரையும் கண்டிக்கும் நோக்குடன் நடத்தப்படும் போராட்டமல்ல; கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்தான்” என்ற விளக்கத்தை அறிந்து மகிழ்ச்சி.
கூட்டத்தில் பலரும் பலவற்றைப் பேசத்தான் செய்வார்கள், எல்லாவற்றுக்கும் தடை போட முடியாது என்பது இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டவற்றுக்குப் பொருந்துவதாக இல்லை. பேசியவர்கள் மற்ற கட்சியினர் மட்டுமல்ல, இந்தக் கூட்டத்தை ஒருங்கிணைத்த தாய்ச்சபையின் நிர்வாகிகளும்தான் என்பதை அறிந்தும் நான் மறைத்தே கருத்துப்பதிந்திருந்தேன். தற்போது தாங்கள் வெளிப்படையாகப் பேசியுள்ளதால் நானும் வெளிப்படையாகக் குறிப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.
நகர்மன்றத் தலைவி அவர்களை பல்வேறு கூட்டங்களுக்கு அழைத்தும் அவர்கள் அலட்சியப்படுத்தியதாகக் கூறியிருக்கிறீர்கள். இப்படி பொத்தாம்பொதுவாகக் கூறுவதை விட, இன்னின்ன கூட்டங்களுக்கு, இன்னின்னார் சென்று அழைத்தோம் என்று பட்டியலிட்டால், விசாரித்து விளக்கமளிக்கத் தோதுவாக இருக்கும்.
நகர் நன்மைக்காக அவர்கள் பொதுநல அமைப்புகளையும், ஜமாஅத்துகளையும் பலமுறை அழைத்தும், உள்நோக்க அரசியலில் சிக்காத சில ஜமாஅத் நிர்வாகிகளும், பொதுநல அமைப்பினருமே கலந்துகொண்டுள்ளதை நேரில் பார்த்தறிந்துள்ளேன். அப்படியிருக்க, அவர்கள் மறுத்திருப்பார்கள் என்பதை என்னால் நம்ப இயலவில்லை. இருந்தாலும் தாங்கள் விரும்பினால், விளக்கம் தந்தால் ஏற்க தயாராகவே உள்ளேன்.
உங்கள் கூற்றுப்படி அவர்கள் முன்னர் சில முறை மறுத்தார்கள் என்பதற்காக மொத்தமாகப் புறக்கணிக்க இயலாது. காரணம் அவர் நகர்மன்றத் தலைவர். இதை பாரம்பரியமிக்க கட்சியினருக்கு நான் சொல்லித் தெரிய வேண்டிய நிலையில்லை.
சரி, அவர்களைத்தான் சந்திக்க விருப்பமில்லை. ஆணையர் எங்கே சென்றுவிட்டார்? அவரும் நீங்கள் அழைத்து அலட்சியப்படுத்தினாரா? இல்லையே? அவரிடம் விளக்கம் பெற்றிருக்கலாமே?
செய்ய வேண்டியவற்றைச் செய்யவில்லை. உறுப்பினர் சாமி அவர்களைப் போராட்ட ஏற்பாட்டுக் குழுவிலும் இணைத்து செய்யக்கூடாததையெல்லாம் செய்துள்ளீர்கள் என்பதே எனது ஆதங்கம்.
நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். நான் தாய்ச்சபையைக் குறைகூறவில்லை. அது மல்லாக்கப் படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதற்கு நிகரானது என்பதை நான் உணர்வேன். அதன் நிர்வாகிகள் என்ற போர்வையில் சிலர் செய்யும் நியாயத்திற்குப் புறம்பான வேலைகளைத்தான் ஏற்க முடியவில்லை. அவ்வாறான ஒரு முயற்சி நடைபெற்றபோது, தன் தரப்பு நியாயத்தை உணர்த்தவே நகர்மன்றத் தலைவி அவர்கள் பொதுமக்களுக்கு விளக்கமளித்து பிரசுரம் அளித்துள்ளதை நான் அறிவேன். அப்பிரச்சினைக்குள் இன்னும் ஆழமாகச் செல்ல விரும்பவில்லை.
காயிதேமில்லத், சிராஜுல் மில்லத், முனீருல் மில்லத் ஆகியோர் மீது மதிப்பு கொண்டிருந்ததாலேயே அதைக் குறிப்பிட்டேனே தவிர கிண்டல் செய்வது என் நோக்கமல்ல. ஆபாக்களை (முன்னோர்களை) கிண்டல் செய்வது எனது கொள்கையும் அல்ல.
இத்தனையையும் தாண்டி, ஆலோசனைக் கூட்ட தீர்மானங்களைப் படிக்குமாறும், அதன்படியே போராட்டம் நடத்தவுள்ளதாகவும் கூறியிருக்கிறீர்கள்.
நான் ஏற்கனவே சொன்னதும், இப்போது சொல்ல விரும்புவதும்:
இது போராட்டம் நடத்துவதற்கான நேரமல்ல. களப்பணியாற்றுவதற்கான நேரம் மட்டுமே. அதை ஓரளவுக்கு செய்யத்தான் செய்கிறீர்கள். ஊரில் இருந்தால் நானும் உங்களோடு இணைந்து செய்திருப்பேன். அல்லாஹ் அந்த பாக்கியத்தை எனக்கு வழங்கவில்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross