செய்தி: நகரில் தேங்கும் மழை நீர் வழிந்தோட நிரந்தரத் தீர்வு கோரி இ.யூ.முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில், நவ. 22 அன்று அனைத்துக் கட்சிகள் நடத்தும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இது வரை நகராட்சி சார்பில் நிவாரண நடவடிக்கைகள் என்ன? posted byசாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி)[21 November 2014] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38211
தொடர் மழை காரணமாக ஊரில் எங்கு பார்த்தாலும் வெள்ளம். பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நேரத்தில் முஸ்லிம் லீக் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர். இந்த சூழ்நிலை காரணமாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் நடைபெற்ற நடப்புகளை சில சகோதரர்கள் கண்டித்து கருத்து பதிந்தனர். அதற்கு முஸ்லிம் லீக் சார்பில் பதில் கொடுத்துள்ளனர்.
இப்போதைய தேவை, மக்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும். நகராட்சி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்தாசை செய்ய முடியுமே தவிர, நிவாரணப் பணிகளை எடுக்க வேண்டியது, நகராட்சியின் வேலை தான்.
ஒருவர் மீது மற்றவர் குறை கூறுவது தொடர்கதை தான்.
2011-ல் இதே போன்ற சூழல் ஏற்பட்ட போது நகராட்சி சார்பில் நடவிக்கை எடுத்தனர். தலைவி, அனைத்து பகுதிகளுக்கும் சென்று நிவாரண பணிகளை முடிக்கி விட்டார்.
http://kayalpatnam.com/shownews.asp?id=7453
இந்த வருடம் அதிக மழை பெய்திருக்கலாம். ஆனால், வெளிநாட்டில் வசிக்கும் என்னைப் போன்றவர்கள் தெரிந்து கொள்ள விரும்புவது, இத்தனை நாட்களாக நகராட்சி செய்த நடவடிக்கைகள் தான் என்ன? விபரம் தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross