posted bySHEIKH ABDUL QADER (RIYADH)[22 November 2014] IP: 5.*.*.* | Comment Reference Number: 38223
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
இறையருள் நிறைக.
நீர் எந்நிலையிலும் ஏற்றதாழ்வுபார்ப்பதில்லை சமநிலையையே நாடும் அதன் இறையாண்மைஅப்படி மனிதர்களாகிய நமக்குள் மட்டுமேநிலவும் வன்மஎண்ணங்கள் நம்மையறியாமலே அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்கிறது எல்லாம்சுயநலத்தின் பிரதிபலன்கள்.பஞ்சபூதங்களைப்பற்றி நமக்கு இன்னும் சரியான விழிப்புணர்வுவரவில்லை. ஒருஇடத்தில் நெருப்புபற்றிக்கொண்டால் அதைச்சுற்றியுள்ள இடத்தை நீர்பாய்ச்சி ஈரப்படுத்திவிடவேண்டும். இந்தவிஷயத்தில் மட்டும் எச்சரிக்கையாக இருக்கும்நாம் நீரின்தன்மையைப்பற்றி சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை.
நீர் சுதந்திராமாக ஓட நாம்வழிவிடாது தந்திரமாகநடந்துகொண்டால் அதுவும்தந்திரமாக வெளியேறும்.
அதாவது ஒருஇடத்தில் நீர்தேங்கிவிட்டால் அதற்குவடிகால் இல்லையென்றாலோ சூரியஒளி சரியாகக்கிடைக்காவிட்டாலோ பூமிதேவையானமட்டுமே வாங்கிக்கொள்ளும் மற்றவைதானாக்வேகசிந்து கொஞ்சம்கொஞ்சமாக இடம்பெயர்ந்துவிடும். ஒருவேளை நம்வீட்டுக்கோட்டைவழியாகவெளியேற விடவில்லையென்றால் அதுதானாகவேகசிந்து கோட்டையையு, நம்வீட்டு அஸ்திவாரத்தையும் அசைத்துவிட்டுச்சென்றுவிடும் அதோடு நாம்கட்டிய மனக்கோட்டையான தானென்ற அகந்தையையும் ஒருகைபார்த்துவிட்டுப்போய்விடும் .
அதோடுமட்டுமல்லாது தொற்றுநோயகளென்பது ஆள்,குலம்,கோத்திரம்பார்த்துவருவதில்லை, அதனால் ஒன்றுபட்டுநாமென்ற எண்ணத்தோடு உடல்பொருள்னலத்திற்காகவும்,ஊர்நலனுக்காகவும் எல்லோரும் இணைந்து நல்லமுடிவுஎடுப்போம்.
பருவமழையில்லையென்று பலகாலமாகஏங்கிய நமக்கு பலனாக நல்லமழையைத்தந்திருக்கிறான் அதற்கு வல்லஇறைவனுக்கு அல்ஹம்துலில்லாஹ்சொல்வதோடு அந்தமழை நீரைசரியாகப்பயன்படுத்துவோம். வல்லஅல்லாஹ் அதற்கான ஹிதாயத்தைத்தந்தருள்வானாக ஆமீன்.
"ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு"
"ஒற்றுமையெனும் கயிற்றைப்பற்றிக்கொள்ளுங்க்கள்"
"அவனுக்கு நன்றிகெட்டால் என்றும் தாழ்வு"
"அவன் சூழ்ச்சிதாரிக்கெல்லாம் பெரிய சூழ்ச்சிதாரி."
குறிப்பு:
இனியேனும் ஊர்நலன்கருதி நகராட்சி தாழ்வான பகுதிகள், நீரோடும் ,தேங்கும் பகுதிகளை துண்டுபோட்டுவிற்கவோ வாங்கவோ கூடாதென்று முடிவெடுத்து அம்மாதிரி நிலங்களை ஊர்னலனுக்காக கொள்வரவுசெய்துகொள்ளவேண்டும் என்றுமே அது ஊர்பொதுச்சொத்தாகவே இருக்கவேண்டும். தனவந்தர்கள் மனமுவந்துதானாகவந்துகொடுக்கலாம் இல்லாதவர்களிடம் சரியானவிலைகொடுத்துவாங்கிக்கொள்ளலாம்
சரியான வேளையில் அறிவுரைதந்த குத்பாபெரிய,சிறியபள்ளி கதீப் அஹ்மத் அப்துல்காதிர் ஆலிம் மஹ்ழரி வர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாகஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross