தனியார் நிலத்தில் குளங்கள் posted byசாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி)[23 November 2014] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38265
சகோதரர் ஸாலிஹ் அவர்களின் தகவலை பார்த்தால், இது நாள் வரை இருந்த குளங்களில் (56) நான்கு நிலங்கள் மட்டுமே அரசு புறம்போக்கு நிலங்கள். இந்த நான்கும் கூட முழுவதுமாக அரசு நிலங்கள் இல்லை.
அந்த நான்கு புறம்போக்கு குளங்களுக்கு போகுமிடம் தனியார் நிலமாக இருக்கும்பட்சத்தில் அங்கும் மழை நீரை வெட்டி விட வழி வகை இல்லை.
தனியார், தங்களது நிலங்களை ஏன் அடைத்தீர்கள் என்று நாம் கேள்வி கேட்க முடியாது. அது அவர்களின் உரிமை.
இப்படியான சூழலில், மழை நீரை கடலுக்குள் விட, நமதூருக்கு தோதுவாக, திட்டம் அமைக்கபட நகராட்சி பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி மேல் குளத்தை காணோம் என்று கூப்பாடு போட்டு பிரயோஜனம் இல்லை. நடக்க வேண்டிய காரியங்களை பார்க்க வேண்டியது தான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross