ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். posted byசாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (காயல்பட்டினம்)[24 November 2014] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38271
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆக்கிரமிப்பை அகற்ற, நீதிமன்றம் கூட தடை விதிக்காது. அதே போல், நமதூர் மட்டுமில்லாமல் மாவட்டத்தில் அனைத்து இடங்களிளும் புறம்போக்கு நிலங்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
அதே நேரத்தில், "காயல்பட்டினம் பகுதியில் பல ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் தண்ணீர் வடிந்து செல்ல வசதி இல்லாமல் உள்ளது. சம்பந்தப்பட்ட இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்". (C&P)
அமைச்சருக்கு யாரோ தவறான தகவல்களை கொடுத்துள்ளனர் என்று நினைக்கிறேன்.
ஏனென்றால், நமதூரில் ஆக்கிரமிப்புகளால் தண்ணீர் தேங்கி இருக்கவில்லை. முறையான வடிகால் வசதி இல்லாததனாலும், ஏற்கனவே இருந்த குளங்கள் தனியார் நிலத்தில் இருந்தவை, தற்போது அதன் உரிமையாளர்களால், வீடுகளாக ஆகி, நீர் போக வழியில்லாமல் போய் விட்டதே காரணம்.
இனி வரும் காலங்களில் வடிகாலுக்கு என்ன திட்டம் மூலம் நிவர்த்தி செய்யலாம் என்று பொறியாளர்கள் ஆய்வு செய்து நடைமுறைபடுத்த வேண்டும். இரண்டாம் பைப் லைன் திட்டம் வரும்போது, புதிய பைப் பதிப்பதற்காக சாலைகளை தோண்டும் போது, வடிகாளுக்கும் ஏற்பாடு பண்ணினால், ஓரளவு சரி செய்யலாம்.
நமதூரை சேர்ந்த நிஜாம் என்ற சகோதரர் ஒரு தளத்தில் பதிந்த கருத்து, "இப்போதைய பிரச்சினை என்னெவென்றால் ஒவ்வொரு தெருவுக்கும் உள்ள N.G.L எனப்படும் Natural Ground level தண்ணீர் ஓடும் விதமாக international Civil Engineering standard படி ஒரு மீட்டருக்கு ஒரு சென்டிமீட்டர் சாய்வு இருக்க வேண்டும். ஆனால் நிஜப்படி ஒரு தெரு மேடாகவும் இன்னொரு தெரு பள்ளமாகவும் உள்ளது. தொலைநோக்கில் நகராட்சி செய்ய வேண்டியது, ஒரு drainage consultancy ஒன்றை தேர்வு செய்து ஊரின் அனைத்து தெருவிலும் N.G.L ஆய்வு செய்து மழைநீர் தேங்காமல் ஓட என்ன என்ன செய்ய வேண்டும்? என்ற அறிக்கையை கொடுப்பார்கள்.அதன் அடிப்படையில் நமது எதிர்கால ரோடு திட்டங்களை அமைக்க வேண்டும்.
இரண்டாவது தற்போதைய மழை நீர் ஓடையின் நீளம் தற்போதைய கனமழையை சமாளிக்க போதாது. தண்ணீர் தேங்கும் இடங்களில் எல்லாம் மழைநீர் ஓடை அமைக்க வேண்டும் இந்த மழை நீர் கழிவு நீர் திட்டங்களில் பணியற்றிவன் என்பதால் நானும் என்னால் முடிந்த ஆலோசனைகளை தெருவிக்க தயாராக இருக்கிறேன்"(C & P ) .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross