Re: பாதாளசாக்கடைத்திட்டம் posted byLANDMARK RAVANNA ABULHASAN (Dubai)[25 November 2014] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38278
பாதாள சாக்கடைத் திட்டம் வெற்றி என்று வெளியூரில் உட்கார்ந்து கொண்டு சொல்வது சரிதானா? அவர் குறிப்பிட்டுள்ள திருச்செந்தூரை போய் பார்க்கட்டும். 3 வருடமாக சீரழியும் நிலை. அங்கு போகவே முடியாது. நாற்றமும், சாக்கடையும், எங்கும் ரோடு குண்டும் குழியும்தான்.
முதலில் பாதாள சாக்கடை மழை நீரை எடுத்துக் செல்லாது என்பதை அவர் அறியட்டும். அதற்குபதில் மழையினால் பாதாள சாக்கடை மூலம் கடல் நீர் High Tide ல் Return ஆகி வீட்டுக்குள் சாக்கடை தான் வருமென்பதை அவர் அறியட்டும்.
நான், ஒரு Water Treatment Specialist என்ற முறையில் நம்மூர் சாக்கடை திட்டத்தை நிறுத்துவதற்கு காரணமே, முதலாவதாக சாக்கடை திட்டம் வந்தால் நிலத்தடி நீர் அகலபாதாளத்திற்குபோய் கடல்நீர் வந்து எல்லா சந்ததியினரும் கடல் நீரில்தான் குளிக்கணும், துவைக்கணும், சமைக்கணும் என்பதை அவர் அறியட்டும்.
மேலும் தற்பொழுது Neat ஆகி புதுவேஷ்டியுடன் பள்ளிக்கு போய் தொழுது வருவோர், சாக்கடை வந்தபின் நஜீஸுடன்தான் வீடு திரும்புவார் என்பதை அறியட்டும்.
அத்துடன் நம்மூருக்குள் வராத Hinjeerம் ஊருக்குள் வந்துவிடும். அங்கங்கே Manhole திறந்து இருக்கும். நமது நகராட்சி உடனே நடவடிக்கை எடுப்பார்கள் என்று நினைக்கிறார் போலும்.
அத்துடன் ஒரு வீட்டுக்கு சுமார் 20,000 த்திலிருந்து 40,000 ரூ வரை Drainage Connectionக்கு செலவு செய்து connect பண்ணவேண்டும். வருடத்திற்கு Drainage fees ஆக 2600 ரூ தற்பொழுது கட்ட வேண்டி வரும். இதற்குத்தான் அவர் விரும்புகிறார் போலும்.
நம் முன்னோர்கள் படித்திருக்காவிட்டாலும், நல்லபடி செயல்பட்டுள்ளார்கள். நான் இந்த fieldல் படித்து அனுபவப்பட்டு சொல்வதை முன்னோர்கள் படிக்காமலே நம்மூருக்கு Septic Tank leaches systemத்தை தந்து போய் உள்ளார்கள்.
எனவே வேண்டவே வேண்டாம் சாக்கடை திட்டம். சாக்கடைதிட்டம் மழை நீரை உட்கொள்ளாது மாறாக மழைநீர் வடிகால் வரலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross