தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. காயல்பட்டினத்தில் நவம்பர் 20 அன்று (நேற்று) 16.30 மணி துவங்கி, இன்று (நவம்பர் 21) 11.00 மணி வரை தொடர் கனமழை பெய்தது. நகரின் அனைத்து சாலைகளிலும் மழை நீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இம்மாதம் 20ஆம் நாள் மாலையில் துவங்கி, நேற்று வரை பெய்துள்ள தொடர் கனமழை காரணமாக, காயல்பட்டினம் பெரும்பாலும் மழை நீரால் நிறைந்துள்ளது. எங்கு பார்த்தாலும், மழை நீர் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டோடிக் கொண்டிருக்கிறது.
இன்று (நவம்பர் 22 சனி) இரவு முழுக்க சாரல் மழை பெய்துகொண்டிருந்தது. இன்று 06.30 மணி நிலவரப்படி, சாரல் மழை பெய்தவண்ணம் உள்ளது.
நேற்றைய மழையின்போது கண்களில் பட்ட காட்சிகள்:-
சாலைகளில்...
ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில்...
கே.எம்.டி. மருத்துவமனை, ஓடக்கரை வழியாக கடலில் தண்ணீர் கலக்கும் பொலிமுகம்...
சதுக்கைத் தெரு பாதுல் அஸ்ஹப் ஹாஜி இல்லம் அருகில்...
மழை வெள்ளத்தில் படகுச் சவாரி செய்யும் வீர இளைஞர்...
படங்கள்:
A.W.ரிஸ்வான் (அப்பாபள்ளி தெரு)
மற்றும்
P.M.N.ரியாஸுத்தீன்
(படங்கள் பலர் வழியாகப் பெற்றனுப்பியவை!)
காயல்பட்டினத்தில் மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |