தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. காயல்பட்டினத்தில் கடந்த 4 நாட்களாக சிற்சிறு இடைவெளிகளுக்கிடையே தொடர்ந்து பெய்து வருகிறது. இன்று (நவம்பர் 22 சனிக்கிழமை) 09.30 மணி முதல் 09.45 மணி வரை கனமழை பெய்தது. பின்னர் மழை நின்றுவிட்டபோதிலும், சாரலும் - தூறலும் விட்டு விட்டுப் பெய்துகொண்டிருந்தது. 22.00 மணியளவில் மீண்டும் சாரல் மழை பெய்யத் துவங்கியுள்ளது. இன்று குளிர்ந்த வானிலை நிலவியது. வெயில் இல்லை. எந்நேரமும் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கும் வகையில் வானிலை நிலவியது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திலிருந்து இன்று (நவம்பர் 22) பெறப்பட்டுள்ள மழைப்பதிவு பட்டியலின் படி, காயல்பட்டினத்தில் 63.00 மில்லி மீட்டர் மழை பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, தூத்துக்குடி மாவட்டத்திலேயே இரண்டாவது அதிகபட்ச மழைப் பதிவாகும்.
நவம்பர் 21ஆம் நாளின் மழை அளவு குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினத்தில் மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
1. அதிக மழை posted byNIZAR (kayalpatnam)[23 November 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 38262
இந்த வருடம் நம் ஊரில் பெய்த மழை ஊரையே புரட்டி போட்டது எனலாம்.
இது வரை எந்த மழையிலும் காயல்பட்டினத்தின் பிரதான சாலைகள் இப்படி முடங்கியது இல்லை.அதை போன்று காயலின் முக்கிய வீதிகள்,வீடுகளில் தண்ணீர் புகும் அளவிற்கு ஒரு மோசமான நிலைமையை இது வரை இந்த காயல் சந்தித்ததில்லை எனலாம்.
ஒரு சில நாட்கள் மழைக்கே இந்த நிலைமை என்றால் தொடர்ந்து மழையை சந்தித்தால் என்ன நடக்கும்?நினைக்கவே அதிர்ச்சியாக உள்ளது.மேற்கே USCஐக்கிய விளையாட்டு சங்கம்,வடக்கே காயல் இஸ்போர்டிங் கிளப்,கிழக்கே கீரிகளும்,தெற்கே மாட்டுகுலம்,தைக்காபுரம்,இப்படி பல இடங்கள் அனைகட்டுகலாக தண்ணீர் தேங்கி உள்ளது.இதில் உள்ள தண்ணீர்களை எப்படி வெளியேற்றலாம் என மக்கள் விழி பிதுங்கி நிட்கிராகள்.இப்படி சொல்லிகொண்டே போகலாம்.
நான் மிகவும் சுருக்கமாக சொல்லி இருக்கிறேன்.இதில் என்ன வேடிக்கை என்றால் நம் ஊரைவிட திருச்செந்தூர்,சாத்தான்குளம் போன்றவைகள் அதிக மழைபெற்றுள்ளன.காயல்பட்டினத்தை விட அதிக மழை பெற்று இருந்தாலும் நம்மை போன்று பாதிப்புகள் அங்கு இல்லை.இதற்கு பிரதான காரணமாக அங்கெல்லாம்நிரந்தரமானஆறுகள்,குளங்கள்,குட்டைகள்,
உள்ளது.அதனால் எவ்வளவு மழை பெய்தாலும் நொடியில் தண்ணீர் வடிந்து ஒடுவிடுகின்றன.ஆனால் இப்பொழுது தான் நம் ஊரில் இருந்த குளங்களை தேடுகிறார்கள்.யாரிடம் போய் புகார் கொடுப்பது நினைத்து பார்க்கையில் வேடிக்கையாக உள்ளது.
இப்படி கடுமையான பாதிப்பை மக்கள் அடைந்து அங்கங்கே பொக்லைன் மூலம் நெடுஞ்சாலை முதல் கொண்டு வெட்டப்பட்டு நிலைமை சற்று கட்டுக்குள் வந்துள்ளது.நகராட்சியால் மழைக்குமுன் புதிய பேருந்தும் நிலையம் அருகில் இருந்து KMT வரை போடப்பட்ட வடிகால் நல்ல பலனை தந்தது.பிரதான வீதிகளின் தண்ணீர்கள் இந்த வடிகால் மூலம் வெள்ளபெருக்காக ஓடி ஓடக்கரை அடைந்து கடலில் கலந்து வருகிறது.இதை போன்ற வடிகால்களை மற்ற இடங்களிலும் ஏற்படுத்தி கடலோடு இணைத்தால் நல்ல பலன் தரும் என நான் எண்ணுகிறேன்.
நீங்களும் உங்கள் தரமான கருத்துக்களை தாருங்கள்,பல பேருடைய ஆலோசனைகள் மூலம் தான் ஒரு நல்ல முடிவை பெற முடியும்.இறைவன் நமக்கு பயனுள்ள நல்ல மழையை தருவானாக என இறையிடம் இறைஞ்சுவோம்..
பெண்ணுக்கு ஒரு வீடு எனும் நிர்பந்தத்தால் ஊரில் இருந்த குளங்களையும் ஓடைகளையும் மேடாக்கி வீடுகட்டியதும், மயானத்தைக்கூட விட்டு வைக்காமல் வீட்டு மனையாக்கியதும் நம் மக்கள் அதுவும் மேல்தட்டில் உள்ள மேன்மக்கள்தாம். ஓடக்கரை ஓடையைக்கூட விட்டு வைக்கவில்லை. கடந்த நகராட்சி போட்ட சிமெண்ட் ரோடால் நீர் வடிய வாய்ப்பின்றி முடுக்குகள், வெட்டைகள் மழைநீர்த் தேக்கங்களாக மாறியுள்ளது என்பதும் உண்மை!
காலத்தில் இல்லாத மழை நமதூரில் பெய்து கொண்டிருக்கும் இவ் வேளையில் நீர் வெளியேற வாய்ப்பின்றி ஊரே வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதில் நகராட்சி இயன்ற அளவு நிவாரனப்பணிகளை செய்துதான் வருகின்றது. புதிய பேருந்து நிலையம் முதல் கே.எம்.டி. வழியாக ஓடக்கரை பாலத்திற்கு மழை நீர் வடிகால் ஓடை அமைத்தது தற்போது பெரும் உதவியாக உள்ளது. இல்லை எனில் இன்று காயலே தண்ணீரில் மூழ்கியிருக்கக் கூடும்.
நான் அறிய இருந்தநாராயண ஓடை இன்று இருந்த சுவடே தெரியாமல் அழிந்து போயிற்று. தரவையில் இருந்த சக்கிலியகுளம் இன்று பெரிய பெரிய ஆட்களின் பட்டா நிலமாக மாறிவிட்டது. இயற்கையின் சீற்றத்தை சமாளிப்பது ஒரு நகராட்சியின் பொறுப்பு மட்டுமல்ல பொதுமக்கள், மற்றும் சமூக நல அமைப்புகள் ஆகியோருக்கும் பொருந்தும். அனைவரும் கைகோர்த்து உதவ வேண்டும்.
வேண்டாத பொண்டாட்டி கைபட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் எனும் மனோபாவத்தை கை விட்டு ஊர் நலனுக்காக களத்தில் இறங்க வேண்டும். வெளிநாட்டில் ஏஸி ரூமில் அமர்ந்து கொண்டு புளுதியை வாரி இரைப்பது சுலபம். ஆக வேண்டிய காரியங்களை பொது மக்களின் ஒத்துழைப்போடு போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே நம் மக்களின் துயர் துடைக்க ஏதுவாக இருக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross