காயல்பட்டினத்தில் பெய்து வரும் தொடர்மழையால் பாதிக்கப்பட்டுள்ள 14ஆம் வார்டுக்குட்பட்ட பகுதிகளான கீழ லெட்சுமிபுரம், மேல லெட்சுமிபுரம், எல்.ஆர்.நகர், பாஸ் நகர், அழகாபுரி ஆகிய பகுதிகளில், நவம்பர் 24 செவ்வாய்க்கிழமையன்று காய்கறி பிரியாண உணவுப் பொட்டலங்கள் 700 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அறக்கட்டளை நிர்வாகி கே.வி.ஜெய்னப் ரஹ்மத், 04ஆவது வார்டு நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன், உறுப்பினர்களான ஏ.டீ.முத்து ஹாஜரா, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், ஏ.பாக்கியஷீலா, ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் மற்றும் கே.வி.ஏ.டீ. குடும்பத்தினர் உணவுப் பொதிகளை பயனாளிகளுக்கு வழங்கினர்.
தகவல் & படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
கே.வி.ஏ.டீ. புகாரீ ஹாஜி அறக்கட்டளை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|