விஸ்டம் பப்ளிக் ஸ்கூல் வளாகத்தில் அப்பள்ளி மாணவர்களுக்கு என வினோத உடைப்போட்டி மற்றும் கழிவு பொருட்களை பயனுள்ள பொருட்களாக மாற்றும் போட்டி ஆகியவை சமீபத்தில் நடைபெற்றன. இது குறித்து அப்பள்ளி சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
கடந்த 13-11-2014 அன்று காலை 10 மணி அளவில் விஸ்டம் பள்ளிக் குழந்தைகளுக்கான வினோத உடைப் போட்டி பள்ளியின் கேட்போர் கூடத்தில் நடந்தது.
பல்வேறு தலைப்பிலான இந்த போட்டிகளில் எல் கே ஜி குழந்தைகளுக்கு ""சமூக உதவியாளர்கள்" என்ற தலைப்பிலும்,
யு கே ஜி குழந்தைகளுக்கு "கார்ட்டூன் பாத்திரங்கள்" என்ற தலைப்பிலும் போட்டிகள் அழகுற நடந்தது .
அதனைத் தொடர்ந்து முதல் வகுப்பினருக்கு "இந்திய மாநில மக்களின் ஆடைகள்",
இரண்டாம் வகுப்பினருக்கு "நான் அதிகம் விரும்பும் தலைவர்",
மூன்றாம் வகுப்பினருக்கு "கல்வி கற்க குழந்தைகளை ஊக்குவித்தல்" ஆகிய தலைப்புகளிலும்
இந்தப் போட்டிகள் சிறப்பாக நடந்தது .
குழந்தைகளின் வெளிக் கொணரப்பட்ட திறமைகளைக் கண்டு பெற்றோர்களும், ஆசிரியர்களும், குழந்தைகளை வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தனர்.
அடுத்த நாள் 14-11-2014 அன்று, நம் அன்றாட வாழ்வில் உபயோகமற்றதாக புறந்தள்ளப்படும் கழிவுகளை பயனுள்ள பாவனைப் பொருள்களாக உரு மாற்றும் திறனை வளர்ப்பதற்காக நடத்தப்பட்ட "மீள் உற்பத்தித் திறனாய்வுப் போட்டியும்" சிறப்பாக நடந்தேறியது.
இந்தப் போட்டியில் 4ஆம், 5ஆம், 6ஆம், வகுப்பு மாணவ மாணவியர் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கலந்து கொண்டனர்.
போட்டியாளர்கள் போட்டிக்குத் தேவையான மூலப் பொருட்களை (கழிவுகளை) தத்தமது வீடுகளிலிருந்தே கொண்டு வந்து பள்ளியில் ஆசிரியர்களின் முன்னிலையிலேயே தங்களின் கற்பனைத் திறனுக்கேற்றவாறு பொருள்களை மீள் உருவாக்கம் செய்து காண்பித்தது குறிப்பிடத்தக்கது.
அனைத்து போட்டி ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்திருந்த பள்ளி ஆசிரியைகளை நிர்வாகத்தினர் பாராட்டினர்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.I.புஹாரி,
அறங்காவலர், விஸ்டம் பப்ளிக் ஸ்கூல். |