காயல்பட்டினத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, நகரின் எல்லாப் பகுதிகளிலும் மழை நீர் தேங்கியும், வழிந்தோடிய வண்ணமும் உள்ளது. இதன் காரணமாக, நகரின் அனைத்து தெருக்களிலும் தரைப்பரப்பு ஈரப்பதத்துடன், தளர்ந்த நிலையில் காணப்படுகிறது.
இம்மாதம் 25ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று காலை 11.50 மணியளவில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில், அஹ்மத் நெய்னார் பள்ளிக்கருகில் சென்றுகொண்டிருந்த தண்ணீர் லாரி ஒன்று, சாலையின் மேற்புறத்திலிருந்த பள்ளத்தைக் கடந்தபோது, வண்டியின் பாரம் தாங்காமல் அதன் பின்புற டயர் பள்ளத்திற்குள் புதைந்தது.
பொக்லைன் இயந்திரத்தின் துணையுடன் நீண்ட நேரம் போராடிய பின், பள்ளத்தில் விழுந்த லாரி எடுக்கப்பட்டது.
இதன் காரணமாக, அப்பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.
தகவல்:
N.S.E.மஹ்மூது
கள உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
காயல்பட்டினத்தில் மழை குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |