திராவிட முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை செயலாளராக மு.த.ஜெய்னுத்தீன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் நகர திமுக நிர்வாகிகள் தேர்தல் ஆறுமுகநேரி பாரீஸ் மகாலில் நடைபெற்றது. மாநில தொண்டரணி செயலாளர் கு.ராஜேந்திரன் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார்.
தற்போதைய நகரச் செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன் தலைமையில் ஓர் அணியாகவும், நகர முன்னாள் செயலாளர் எம்.என்.சொளுக்கு தலைமையில் மற்றோர் அணியாகவும் போட்டியிட்டனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 03ஆம் நாளன்று இவ்விருவரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
41 வார்டு செயலாளர்களுள் 36 பேர் வாக்களித்தனர். இதில், மு.த.ஜெய்னுத்தீன் 30 வாக்குகள் பெற்று மீண்டும் நகரச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.என்.சொளுக்கு 6 வாக்குகள் பெற்றார்.
நகர அவைத்தலைவராக எம்.என்.கிதுரு முஹம்மது, துணைச் செயலாளர்களாக கணபதி, சபாபதி, ராணி, பொருளாளராக தாஜுத்தீன், மாவட்ட பிரதிநிதிகளாக பன்னீர் செல்வம், காதர் சாகிபு, தங்கம் கஸ்ஸாலி மற்றும் 12 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
வெற்றிபெற்ற நிர்வாகிகள் தி.மு.க. தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
நன்றி:
தினத்தந்தி
திமுக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[படம் இணைக்கப்பட்டது @ 17:15 / 27.11.2014] |