வடக்கிழக்கு பருவ மழை காரணமாக காயல்பட்டினம் உட்பட தமிழகத்தின் பரவலாக மழை பெய்து வருகிறது. சமீப காலங்களில் மிக அதிக அளவில்
மழை பெய்துள்ள காயல்பட்டினம் நகரில் பல இடங்களில் நீர் தேங்கி உள்ளது.
கடந்த ஞாயிறு அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்துக்கொண்ட
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், காயல்பட்டினத்தில் சிறப்பு முகாம் நடத்திட வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் இன்று (நவம்பர் 27) காலை 09:00
மணி முதல் மாலை 04:00 மணி வரை சென்ட்ரல் மேனிலை பள்ளியில் நடைபெற்றது.
இந்த பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சிறப்பு முகாமில், பொது மருத்துவம், இரத்த சோகை, விட்டமின் குறைபாடுகள்,
காய்ச்சல், நீரழிவு நோய், இரைப்பை மற்றும் குடல் நோய், மன நோய், பால்வினை நோய், இதயம், தோல், காது, மூக்கு, தொண்டை, கண்
நோய்கள், மகளிர் நலம், மகப்பேறு, குழந்தைகள் நலம் மற்றும் சித்த மருத்துவம் ஆகிய சிகிச்சைகளுடன் இரத்த பரிசோதனை, ஸ்கேன், ஈ.சி.ஜி.
போன்ற சிறப்பு பரிசோதனைகள் செய்யப்பட்டு தேவைபட்டவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
இம்முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் கே.ரோகித் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களான எஸ்.ராணி, அகல்யா, சஞ்சய்,
ஏ.சீனிவாசன், பிரிய தர்சினி, ஜமீமா இவான்ஜலி, பணிமலர் மற்றும் சிறப்பு மருத்துவர்களான பாவநாசகுமார், அய்யம் பெருமால், சரஸ்வதி
உள்ளிட்ட குழந்தை நல சிறப்பு மருத்துவர், அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர், சித்த மருத்துவர் ஆகியோர் மருத்துவ ஆலோசனையும்,
சிகிச்சையும் வழங்கினர்.
மேலும் வாட்டார சுகாதார மேற் பார்வையாளர் ஆர்.சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்களான எஸ்.ஜெய்சங்கர், எல்.ஆன்ந்த ராஜ், ஏ.பி.சோம
சுந்தரம், எஸ்.செல்வகுமார், எஸ்.சகாய ராணி, லில்லி தங்கராணி மற்றும் சமுதாய நல செவிலியர் ஆர்.கந்தம்மாள், பகுதி சுகாதார
செவிலியர்களான டி.ஜெயராணி, ஆர்.கஸ்துரி பாய், வட்டார அளவிலான இருபத்தி இரண்டு கிராம சுகாதார செவிலியர்கள் உட்பட நிலைய
பணியாளர்கள், ஆய்வக தொழில் நுட்பனர்கள், செவிலியர்கள் இம்முகாமில் பணியாற்றினார்கள். அவர்களுடன் காயல்பட்டணம் நகராட்சி
ஆணையாளர் திரு.காந்திராஜ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் திரு பொன்வேல்ராஜ் மற்றும் நகராச்சி பணியாளர்கள் ஒத்துழைப்பு வழங்கினர்.
ஆண்களில் 559 நபர்களும், பெண்களில் 925 நபர்களும், குழந்தைகளில் 138 நபர்களும் சிகிச்சை பெற்றனர். இதில் மேல் சிகிச்சைக்காக 14 நபர்கள்
பரிந்துரைக்கப்பட்டனர். ஆக மொத்தம் 1622 பயணாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
மருத்துவ முகாமில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு மதிய உணவு மற்றும்
தேநீர் வழங்கியதுடன் ஆட்டோ ஒலிப்பரப்பு, உள்ளூர் தொலைகாட்சி மூலம் அறிவிப்பு செய்தல், பிரசுரம் மற்றும் பள்ளி ஒலிபெருக்கி வாயிலாகவும்
இம்முகாமை மக்கள் அறிவதற்கு ஏற்பாடுகளை சமீபத்தில் அமைக்கப்பட்ட காயல்பட்டினம் மழை வெள்ள நிவாரணக் குழு செய்திருந்தது.
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik
கண்டி சிராஜுத்தீன் நிஜார்,
ஒருங்கிணைப்பாளர், காயல்பட்டணம் மழை வெள்ள நிவாரணக் குழு.
ஹாபிழ் எம்.எம்.முஜாஹித் அலி
புகைப்படங்களில் உதவி:
ஏ.எஸ்.புஹாரி
[சில படங்கள் தவிர்க்கப்பட்டு, கூடுதல் படங்கள் இணைக்கப்பட்டன @ 12:16 / 29.11.2014] |