தமிழக அரசு - 1881 ஆம் ஆண்டு செலவாணி முறிச்சட்டத்தின் (NEGOTIABLE INSTRUMENTS ACT) கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும், தமிழ்நாட்டிலிலுள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2015 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் குறித்த ஆணைகள் வெளியிட்டுள்ளது.
தகவல்: இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை,
சென்னை - 9.
1. Re:...விடுமுறைகள் நிறைந்த நாடு பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு... posted bymackie noohuthmbi (kayalpaattinam)[29 November 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 38308
அரசு விடுமுறை நாட்கள் 24. சனி, ஞாயிறு 52+52 மொத்தம் 128 நாட்கள் விடுமுறை. வருடத்தில் 365 நாட்களை மூன்றில் ஒரு பங்கு சட்டப்படி விடுமுறை நாட்கள். இது தவிர உள்ளூர் விடுமுறைகள் - கோயில் திரு விழாக்கள் - கந்தூரி விழாக்கள் - மழை பெய்தால் விடுமுறை - கோடை வெயில் அடித்தால் விடுமுறை. சாலை மறியல் - போராட்டம் - ஆர்ப்பாட்டம் என்று திடீர் விடுமுறைகள்.
அடேயப்பா...அரசு ஊழியர்களாக பணி புரிய கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதனால்தான் எல்லோரும் அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறார்கள்.
உலகத்திலேயே அதிகமான விடுமுறை நாட்கள் உள்ள நாடு நமது பாரத நாடுதான் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன...
பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு.
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் கிடைத்து விட்டதென்று....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross