கத்தர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், வரும் டிசம்பர் மாதம் 05ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று நடைபெறுமென, அதன் செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செய்தி தொடர்பாளர் ‘கவிமகன்’ காதர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இறையருளால் எமது கத்தர் காயல் நல மன்றத்தின் 70ஆவது செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 14ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று, கத்தர் காயல் நண்பர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
கே.எம்.எஸ்.மீரான் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மன்றத் தலைவர் எஸ்.ஏ., பாஸுல் கரீம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பங்கேற்பாளர்களின் - நகர்நலன் குறித்த கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - இரங்கல்:
கத்தர் காயல் நல மன்றப் பொருளாளர் அஸ்லம் அவர்களின் தாய்மாமா - இம்மாதம் 05ஆம் நாளன்று காலமான ஹாஜி கே.ஏ.எல்.மொகுதூம் முஹம்மத் அவர்களின் மறைவிற்கு, இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் மஃக்ஃபிரத் - பாவப் பிழை பொறுப்பிற்காக உளமார துஆ செய்கிறது.
தீர்மானம் 2 – நன்றியறிவிப்பு:
கத்தர் காயல் நல மன்றம், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங், ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்புகள் இணைந்து, 12.10.2014 அன்று காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில் நடத்திய புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமை முன்னின்று நடத்திய ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழுவினர், மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட திருச்சி ரோஸ் கார்டன் புற்றுநோயாளிகள் அரவணைப்பகம், இணைந்து நடத்திய அமைப்புகளின் பிரதிநிதிகள், இடவசதி செய்து தந்த கே.எம்.டி. மருத்துவமனை நிர்வாகிகள், அதன் மேலாளர் கே.அப்துல் லத்தீஃப், பங்கேற்ற அனைத்து பொதுமக்கள் உள்ளிட்ட யாவருக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், எல்லாம்வல்ல அல்லாஹ், நமதூரை புற்றுநோயின் தாக்கத்திலிருந்து முழுமையாகப் பாதுகாத்தருள இக்கூட்டம் பிரார்த்திக்கிறது.
தீர்மானம் 3 - அடுத்த பொதுக்குழு:
மன்றத்தின் அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தை, இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் டிசம்பர் மாதம் 05ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று நடத்திட இக்கூட்டம் தீர்மானிப்பதோடு, கூட்ட நேரம், இடம், நிகழ்ச்சி நிரல் உள்ளிட்டவை குறித்து பின்னர் முடிவு செய்து அறிவிக்கவும் தீர்மானிக்கப்படுகிறது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. துணைத்தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ் நன்றி கூற, ஹாஃபிழ் எம்.எம்.எல்.முஹம்மத் லெப்பை துஆவைத் தொடர்ந்து, ஸலவாத் - க, ப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
(உள்ளூர் பிரதிநிதி - கத்தர் கா.ந.மன்றம்)
படங்கள்:
முஹம்மத் முஹ்யித்தீன்
கத்தர் காயல் நல மன்றத்தின் முந்தைய (69ஆவது) செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கத்தர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |