காயல்பட்டினம் நகராட்சியின் எல்லைக்குள் உள்ள டி.சி.டபிள்யூ தொழிற்சாலையை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் செய்துங்கநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் உள்ள மாரியம்மன் கோயில் திடலில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். கருங்குளம் ஒன்றிய தலைவர் இசக்கிமுத்து முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் ஜெயகுமார் ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்தார்.
ஆறுமுகநேரி கெமிக்கல் ஆலையில் 6 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள். அந்த ஆலையை மூட பல்வேறு அமைப்பு போராடி வருகிறது.
ஆலையை மூடினால் 6 ஆயிரம் குடும்பம் பட்டினியில் தவிக்கும். எனவே அந்த ஆலையை மூடக்கூடாது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொது செயலாளர் சக்தி வேல், மாவட்ட செயலாளர் சுடலை முத்து, கசமுத்து, சீத்தாராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்காரபாண்டி, மாநில பேச்சாளர் மணி வாசகம், ஒன்றிய பொருளாளர் வேம்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தகவல்:
www.tutyonline.com |