நவம்பர் 28 வெள்ளியன்று மதியம் 2:00 மணியளவில் காயல்பட்டினம் நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அக்டோபர் 20 அன்றைய கூட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட 10 பொருட்களும், புதிதாக 68 பொருட்களும் விவாதிக்கப்படவுள்ளன.
1. ஊரில் தானியங்கி கண்காணிப்பு காமிரா? posted byசாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி)[27 November 2014] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38293
சென்ற மாதம் உறுப்பினர்களின் எதிர்ப்பின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, இந்த மாதம் மீண்டும் (தீர்மானம் எண் 2) வந்துள்ளது. உறுப்பினர்களின் எதிர்ப்பு, "இதை நாம் (நகர்மன்றம்) முடிவு செய்ய முடியாது, ஊரில் உள்ள அனைத்து ஜமாஅத்தாரிடம் கலந்து பேசி தான் தீர்மானம் நிறைவேற்ற முடியும்" என்பது தான்.
இந்நிலையில், மீண்டும் அதே தீர்மானம் வந்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தீர்மானங்கள் அடுத்த கூட்டத்தில் வரும் என்பது தெரிந்த செய்தி தான்.
காவல்துறை ஆய்வாளர், ஆறுமுகநேரி அவர்களின் அறிவுரையின்படி தான் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. கண்காணிப்பு காமிரா வைக்க வேண்டும் என்பது, காவல்துறையின் உத்தரவா? அல்லது அறிவுரையா? அறிவுரை என்றால், ஏற்கவும் செய்யலாம், நிராகரிக்கவும் செய்யலாம்.
உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், அனைத்து தரப்பினரின் கருத்து கேட்கப்பட்டதா? அப்படி காமிரா பொருத்துவதால் சாதக பாதகங்கள் என்ன?
நமதூருக்கு இது தேவையா? ஏனென்றால், ஒரு இடத்தில் அல்ல, நகராட்சி பகுதிகள் என்று வருவதால், பல இடங்களில் வைக்கப்படும். இது நமது தனிமையை (privacy) பாதிக்காதா? நமதூரை விட அதிகம் மக்கள் கூடும் இடமான திருச்செந்தூரில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளதா?
2. சர்வே எண் 278-ல் பயோ காஸ் திட்டம்- பொறியாளர் ஒப்புதல். posted byசாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி)[27 November 2014] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38294
ஒரு வகையாக முடிவுக்கு வருகிறது பயோ காஸ் திட்ட சிக்கல். இந்த கூட்டத்தின் (சென்ற மாதம்) ஒத்திவைக்கப்பட்ட பொறு எண் 6-ல் அலுவலக குறிப்பாக ," நகராட்சி நிர்வாக மண்டல செயற் பொறியாளர் அவர்கள், பல இடங்களை ஆய்வு செய்து, நில அளவை எண் 278, 'பயோ மெத்தனெசன் பிளான்ட்' அமைக்க உகந்த இடம் என்று அனுமதி அளித்துள்ளார்" அல்ஹம்துலில்லாஹ்.
அதே போல், இந்த மாத முதல் கூட்டப்பொருளாக, தலைவரின் பொருள் உள்ளது. அதில் "நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ள சர்வே எண் 278-ல் திடக்கழிவுகளை (குப்பை) கொட்டுவதற்கு, அரசு துறைகளின் அனுமதி பெரும் வகையில், அந்த இடத்தை சுற்றி 500 மீட்டர் அளக்கு (buffer zone & No development zone) என்று அறிவித்து நகராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றி அரசு கெஜட்டில் வெளியிட மன்றத்தின் அனுமதிக்கு" என்று இருக்கிறது.
போன வருடமே, பெரும்பான்மையான உறுப்பினர்கள் அந்த இடத்தில் திடக்கழிவு & பயோ காஸ் திட்டத்திற்காக தீர்மானம் நிறைவேற்றி உள்ளதால், இது ஒருமனதாக நிறைவேறும்.
இரண்டு வருடமாக நிலுவையில் உள்ள பயோ காஸ் திட்டமும், பல வருடமாக நிலுவையில் இருந்த திடக்கழிவு கொட்டும் திட்டமும் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.
முக்கியமாக, ஊரில் கண்ட கண்ட இடங்களில் குப்பை கொட்டுவதும் தடுக்கப்படும் என்று நம்புவோமாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross