காயல்பட்டினம் தஃவா சென்டர் ஏற்பாட்டில் தஃவா தர்பிய்யா நிகழ்ச்சியின் 4ஆவது பிரிவு வகுப்புகள் சமீபத்தில் துவங்கியது. இது குறித்து அவ்வமைப்பு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
நமது தஃவா சென்டர் சார்பாக பிறமத சகோதரர்களுக்கு எவ்வாறு தஃவா செய்வது என்ற தஃவா தர்பிய்யா வகுப்பானது இதுவரை மூன்று Batch கள் பல்வேறு அழைப்பாளர்களைக் கொண்டு அழைப்புப்பணியின் பண்முகங்கள் பற்றிய வகுப்புகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
இதன் தொடர்ச்சியாக Batch-4 தஃவா தர்பிய்யாவின் தொடக்க வகுப்பானது கடந்த 09.11.2014 அன்று ஆரம்பம் செய்யப்பட்டது. இவ்வகுப்பில் கலந்து கொள்ள கல்லூரி மாணவர்கள், வேலை பார்ப்பவர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் என பலரும் உள்ளூர் / வெளியூரிலிருந்து 35 ஆண்களும், மேலும் தஃவா பணிகளில் பெண்களும் ஈடுபட வேண்டும் என்று பெண்களுக்கான தனி இடவசதியுடன் ஏற்ப்பாடு செய்யப்பட்டு உள்ளூர்/வெளியூரிலிருந்து மொத்தம் 29 பெண்கள் ஆர்வமுடன் தஃவா செய்திட தர்பிய்யா வகுப்பில் கலந்துகொண்டனர்.
வகுப்பு காலை 10 மணிக்கு கிராஅத்துடன் ஆரம்பம் செய்யப்பட்டது. பின் தஃவா சென்டர் மேலாளர் சகோ.ஜக்கரிய்யா அவர்கள் வகுப்பை நடத்தினார்கள். இதில் தூதர் வழியில் தூது, இஸ்லாத்தின் வளர்ச்சி, நாம் ஏன் தஃவா செய்யவேண்டும் போன்ற கருத்துகளை மையமாக வைத்து பாடம் நடத்தினார்கள்.
மதியம் 2.10 மணியளவில் காலை நடத்தப்பட்ட வகுப்பிலிருந்து சந்தேகங்கள் கேட்கப்பட்டு விள்க்கம் கொடுக்கப்பட்டது. பின் அன்றாடம் நாம் ஓத வேண்டிய துஆவை ஏன் மனனம் செய்ய வேண்டும்? ஏன் அதனை வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும்? என்ற சிறு விளக்கத்துடன் துஆ மனனம் பயிற்சியை சகோ. பிலால் அவர்கள் நடத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து தாயிகளுக்கான நற்பண்புகள் என்ற அஹ்லாக் வகுப்பை ஷேக். நூஹ் அல்தாபி அவர்கள் நடத்தினார்கள். இதில் “ தக்வா – இறையச்சம் “ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
மாலை 5 மணியளவில் மாணவர்களுக்கான பேச்சு பயிற்சி முறைகள் மற்றும் பேசும் விதம் பற்றிய வகுப்புடன் தஃவா பயிற்சிக்கான 4வது Batch –ன் முதல் வகுப்பு இனிதே நிறைவு பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்...
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |