நடப்பு வடகிழக்குப் பருவமழையின் தாக்கத்தால், காயல்பட்டினத்தில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உரிய நிவாரண உதவிகள், சமுதாய - பொதுநல - அரசியல் அமைப்புகள், ஜமாஅத்துகள், தனி ஆர்வலர்கள் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. முறையான ஒருங்கிணைப்பின்றி செயல்பட்டால் ஒரே பகுதிக்கு பலரது உதவிகள் கிடைப்பதும், மற்றொரு பகுதிக்கு எவரது உதவியும் கிடைக்காதிருப்பதுமான நிலை ஏற்படும் என்று கருதி, “காயல்பட்டினம் மழை வெள்ள நிவாரணக் குழு” எனும் பெயரில், சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நிவாரண சிறப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் கண்டி ஸிராஜ் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.
நமதூர் காயல்பட்டினத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் விளைவுகளை உள்ளூர் ,வெளியூர் மற்றும் உலகமெங்கும் வாழும் காயலர்கள் அறிவர்.
அரசுத் துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் நிவாரண பணிகளை மேலும் முடுக்கி விட அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பொது நல அமைப்புகள் அரும்பாடுபட்டு வருகின்றன.
இருப்பினும் அரசு துறைகள் சாராத பணிகளில் ஒன்றான மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் எளியோர்களுக்கு கடந்த ஒரு வாரகாலமாக உணவளிக்கும் அறப்பணியை நமதூர் தனியார் நிறுவனங்கள் ,தனிப்பட்ட நபர்கள் உள்ளிட்ட பொது நல அமைப்புகளும் ,இயக்கங்களும், கடல் கடந்து வாழும் காயல் நல அமைப்புகளும் செய்து வருகின்றன.
அரசு துறை சார்ந்த பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்கும் நம்மவர்கள் முற்குறிப்பிட்ட இந்த அறப்பணிகளுக்கும் தங்களால் இயன்ற ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர். இந்நிலையில் பெய்து வரும் மழை தொடருமானால் உருவாகும் சூழ்நிலைக்கு ஏற்ப பாதிக்கப்படுவோருக்கு உணவு சமைத்து வழங்கவோ அல்லது பாதிக்கபடுவோர் அவர்களாகவே சமைப்பதற்கு உரிய பொருட்களை வழங்கவோ உரிய நிதி ஆதாரம் தேவைப்படுகிறது. மேலும் பாதிக்கப்படுவோர்க்குண்டான ஏனைய நிவாரண உதவிகள் செய்யவும் இந்த நிதி ஆதாரம் உதவும்.
எனவே இதுபோன்ற நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க தன்னார்வமிக்க சேவையாளர்களைக் கொண்ட குழுவினை அமைத்துள்ளோம்.
உணவு வழங்குதல் உள்ளிட்ட நிவாரண பணிகளில் ஈடுபட்டு வரும் தன்னார்வமிக்க சேவையாளர் மற்றும் அமைப்பினர்கள் அனைவர்களும் ஒன்றினைந்து தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட நிவாரணக்குழுவே இந்த காயல்பட்டினம் மழை வெள்ள நிவாரணக் குழுவாகும்.
வரலாறு காணாத அளவுக்கு காயலில் பெய்துவரும் மழையால் உருவாகியுள்ள இடர்பாடுகளை நீக்க; தனிப்பட்ட முறையிலோ, அமைப்பு சார்பாகவோ தங்களால் இயன்ற நிதியினை இந்த நிவாரண குழுவின் பொருளாளர் அவர்களிடம் கிடைக்க செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். அத்துடன் நிதி வழங்க விரும்புவோர் பொருளாளரின் கைப்பேசியில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
குழுவினர் விபரம் வருமாறு:-
தலைவர்:
துளிர்.எம்.எல்.ஷேக்னா லெப்பை
பொருளாளர்:
ஜுவெல் ஜங்ஷன் கே.அப்துல் ரஹ்மான் (+91 9790 135272)
ஒருங்கிணைப்பாளர்:
கண்டி ஸிராஜுத்தீன் நிஜார் (+91 8508 842845)
செயற்குழு உறுப்பினர்கள்:-
01) எஸ்.ஷம்சுத்தீன்
02) ஏ.செய்யது அபூதாஹிர்
03) எம்.ஏ.சேகு சுலைமான்
04) எம்.கே.ஜாஹிர் ஹுஸைன்
05) முர்ஷித் முஹ்ஸின்
06) எம்.ஐ.ஏ.காதர்
07) வி.ஐ.முஹம்மது புஹாரி
08) மன்னர் பாதுல் அஸ்ஹப்
09) எஸ்.ஜெ.மஹ்மூது ஹஸன்
10) ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ்
11) வாவு உவைஸ்
12) எம்.எச்.அபுல் மஆலீ
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |