தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. காயல்பட்டினத்தில் கடந்த சில வாரங்களாக சிற்சிறு இடைவெளிகளுக்கிடையே தொடர்ந்து பெய்து வருகிறது. நாள்தோறும் சாரல் தவறாமல் பெய்கிறது. அவ்வப்போது சிறுமழை, இதமழை பெய்து வருகிறது. வானம் எப்போதும் மேக மூட்டத்துடனேயே காணப்படுகிறது. நகரில் குளிர்ந்த வானிலை நிலவுகிறது.
பேருந்து நிலையம் அருகிலுள்ள நெடுஞ்சாலை வெட்டி விடப்பட்டுள்ளதால் சாலை தடுப்பு வைத்து மறிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் வழியே வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட தனியார் வாகன நிறுவனமொன்று, மகாத்மா காந்தி நினைவு வளைவையொட்டி, இன்று (நவம்பர் 25 செவ்வாய்க்கிழமை) அதன் கண்காட்சிப் பந்தலை விரிவாக அமைத்து விளம்பரம் செய்தது. இதற்காக, நகராட்சியில் எவ்வித முன்னனுமதியும் பெறப்படவில்லை என்பதை விசாரித்ததில் அறிய முடிந்தது.
களப்பணியில் உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
நகரில் மழை குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |