ஜித்தா காயல் நல மன்ற குழுவினர் கிளை அமைப்பான யான்போ காயல் நல மன்றத்தினரை எதிர்வரும் 28ஆம் தேதி வெள்ளியன்று யான்போ நகரில் சந்திக்க உள்ளார்கள். இது குறித்து வெளிவந்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
யான்போ வாழ் அன்பு காயல் நெஞ்சங்களே, அஸ்ஸலாமு அலைக்கும்! நம் ஜித்தா காயல் நல மன்றத்தாரின் குழுவினர்கள் தங்கள் கிளை கழகமான யான்போ காயல் நல மன்ற சகோதரர்களை சந்திக்க எதிர்வரும் 28ஆம் தேதி வெள்ளியன்று வர இருக்கிறார்கள் இன்ஷா அல்லாஹ்! அத்தருணத்தில் யான்போ அனைத்து காயல் சகோதரர்களும் வருகை தருமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்!
சுமார் 350 கி மீ தொலைவிலிருந்து தங்கள் சொந்த, அலுவலக வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு குழுவாக புறப்பட்டு யான்போ காயல் சகோதரர்களை ஓரிடத்தில் ஒட்டுமொத்தமாக சந்தித்து நம் அமைப்பின் கூட்டத்தை கூட்டவேண்டும் என்ற எண்ணத்தில் இங்கு வருகை தரும் அத்தனை சகோதரர்களையும் அகம் குளிர நாம் முன்னின்று வரவேற்கக் கடமைப்பட்டுள்ளோம்!
ஆகவே அன்பு சகோதரர்களே வரும் வெள்ளியன்று சகோதரர் "கலவா" இபுறாஹீம் அவர்கள் இல்லமாகிய "காயல் ஹவுசில்" அனைவர்களும் சங்கமமாகும்படி வேண்டுகிறோம். அங்கு மதிய விருந்துக்குப் பின்னர் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அவ்வமயம் இதுவரை ஜித்தா அமைப்பினர்கள் நமதூர் வறிய மக்களுக்கு மற்றும் அனைத்துவகை பாதிக்கப்பட்ட மக்களுக்காக செய்த உதவிகளையும் இயக்கத்தின் செயல்முறை திட்டங்களையும் விளக்க இருப்பதால், தாங்கள் முற்கூட்டியே வருகைதரும்படி மறுமுறையும் வேண்டிக்கொள்கிறோம்.
வஸ்ஸலாம்!
இவண்,
காயல் நலமன்ற யான்போ கிளை பொறுப்பாளர்கள்!
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
முஹம்மது ஆதம் சுல்தான்,
யான்போ, சௌதி அரேபியா. |