புதிய கட்டண நிர்ணயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை ஆட்டோ ஓட்டுனர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட அனைத்து ஆட்டோ ஓட்டுனர்கள் கூட்டமைப்பினர் கூறுகையில்,
தூததுக்குடி மாவட்டத்தில் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு ஆட்டோ ஓட்டுனர்கள் அனைவரும் ஆட்சேபனை செய்கிறோம்.
ஆட்டோ ரிக்ஷாக்களில் கட்டண நிர்ணய மீட்டர் பொருத்துவது சென்னை போன்ற பெருநகரங்களுக்கு மட்டுமே நடைமுறை சாத்தியம் ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரதான நகரங்களான கோவில்பட்டி, திருச்செந்தூர், தூத்துக்குடி ஆகியவை சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவே கொண்ட நகரங்கள் ஆகும். இதர ஊர்கள் இதனை விட பரப்பில் சிறியவை.
இந்த ஊர்களில் மீட்டர் கட்டணம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஆட்டோ ஓட்டுனர்களின் வருமானம் பெரிதும் பாதிக்கப்படும். ஆட்டோ ஓட்டுனர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு தேவையான குறைந்தபட்ச வருமானம் கூட கிடைக்காது. எனவே ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்க்கை நிலையை கணக்கில் எடுத்து குறைந்தபட்ச கட்டணம் 2 கிலோ மீட்டர் வரை ரூ.40 எனவும், அதற்கு மேல் உள்ள ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.20 எனவும் நிர்ணயம் செய்ய வேண்டும்.
மேலும் இந்த பிரச்சினைகளில் அரசு தலையிட வேண்டும் என்று வலி்யுறுத்தி நாளை (இன்று; நவம்பர் 27) தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து ஆட்டோக்களும் ஓடாது. மேலும், கோரிக்கைளை வலியுறுத்தி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆட்டோக்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்
என்று தெரிவித்துள்ளனர்.
தகவல்:
www.tutyonline.com
|