கர்நாடக மாநிலம் பெங்களூரு காயல் நல மன்றத்தின் 6ஆம் ஆண்டு துவக்கப் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் 2ஆவது குடும்ப சங்கம நிகழ்ச்சி, வரும் டிசம்பர் மாதம் 07ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு விடுத்து அம்மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் பீ.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை:-
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்பின் பெங்களூரு காயல் நல மன்ற உறுப்பினர்களுக்கும், பெங்களூருவில் வசிக்கும் காயலர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹ்... இறையருளால் இம்மடல் தங்கள் யாவரையும் பூரண உடல் நலமுடனும், தூய நகர்நலச் சிந்தனைகளுடனும் சந்திக்கட்டுமாக...
நம் மன்றத்தின் 6ஆவது ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு பொதுக்குழுக் கூட்டமும், காயலர் குடும்ப சங்கம நிகழ்ச்சியும், இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 07.12.2014 ஞாயிற்றுக்கிழமை 09.00 மணி முதல் 17.30 மணி வரை, பெங்களூரு தேவனஹல்லியிலுள்ள Auditor Buhari Farm Houseஇல் நடைபெறவுள்ளது.
பங்கேற்கும் அனைவருக்கும் காலை மற்றும் மதிய உணவு ஏற்பாடுகள், நமதூர் பாரம்பரிய முறைப்படி செய்யப்படவுள்ளது.
தாங்கள் யாவரும் இச்செய்தியையே அழைப்பாக ஏற்று, குறித்த நேரத்தில் அவசியம் வந்து கலந்துகொள்ளுமாறும், உங்களுக்கறிமுகமான இதர உறுப்பினர்களுக்கும் இத்தகவலைத் தெரிவித்து, நம் மன்றத்தின் அனைத்து உறுப்பினர்கள், கூட்ட நாளன்று பெங்களூருவில் இருக்கும் காயலர்கள் உள்ளிட்ட அனைவரையும் கூட்டத்தில் பங்கேற்கச் செய்யுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
பங்கேற்கும் அனைவருக்கும் உணவு ஏற்பாடுகளை திருப்திகரமாகச் செய்திடுவதற்காக, உங்கள் வருகையை கீழ்க்காணும் பொறுப்பாளர்களிடம் தொடர்புகொண்டு உறுதி செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்:-
முஹம்மத் இப்றாஹீம் நவ்ஷாத் (தொடர்பு எண்: +91 89517 37353)
ஷேக் சுலைமான் (தொடர்பு எண்: +91 99165 16947)
குலாம் (தொடர்பு எண்: +91 94491 71122)
மேற்படி பொறுப்பாளர்களை மாலை 06.00 மணிக்குப் பிறகு மட்டும் தொடர்புகொள்ளுமாறும், மற்ற நேரங்களில் தயவுசெய்து தொடர்புகொள்ள வேண்டாம் எனவும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். நிகழ்ச்சிகள் குறித்த மேலதிக விபரங்களுக்கும் இவர்களையே தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஃபிழ் மன்னர் செய்யித் அப்துர்ரஹ்மான்
பெங்களூரு காயல் நல மன்றத்தின் முந்தைய பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
பெங்களூரு காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |