காயல்பட்டினத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள காட்டுதைக்கா தெரு - தருவை, சீதக்காதி நகர் மற்றும் இரத்தினபுரி பகுதிகளை எஸ்.டி.பீ.ஐ. கட்சியின் காயல்பட்டினம் நகர தலைவர் சேக் அப்துல் காதர் தலைமையில் நகர செயலாளர் அப்துல் ரஹ்மான், மருத்துவர் அணி முஹ்யித்தீன் மற்றும் உறுப்பினர்கள், இம்மாதம் 22ஆம் நாளன்று பார்வையிட்டு, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.
அதனடிப்படையில் இம்மாதம் 23ஆம் நாளன்று முதற்கட்டமாக காட்டுதைக்கா தெரு - தருவை பகுதியில் பாதிக்கப்பட்ட 40 குடும்பங்களுக்கு மினரல் வாட்டர், மருந்துப் பொருட்கள், குழந்தைகளுக்கான பால் பவுடர், அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இதர பகுதிகளையும் பார்வையிட்டு, உதவிகளை செய்யவிருப்பதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
தகவல்:
M.ஜஹாங்கீர்
SDPI தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |