நடப்பு வடகிழக்குப் பருவமழையின் தாக்கத்தால், காயல்பட்டினத்தில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உரிய நிவாரண உதவிகள், சமுதாய - பொதுநல - அரசியல் அமைப்புகள், ஜமாஅத்துகள், தனி ஆர்வலர்கள் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
காயல்பட்டினம் காட்டு தைக்கா தெரு - தருவை, குலாம் ஸாஹிப் தம்பி தோட்டம், பாக்கர் காலனி, நியூ பாக்கர் காலனி உள்ளிட்ட பகுதிகளில், குடிசைகள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக, ஏற்கனவே அன்றாடங்காய்ச்சிகளாக உள்ள பலர், நாள் முழுக்க எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவியலாமல் அவதியிலுள்ளனர்.
அவர்களது இல்லங்களிலிருந்து மழை நீர் வற்றும் வரை, காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளி நிர்வாகத்தின் சார்பில் உணவு ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டு வருகிறது.
இதுவரை வழங்கப்பட்ட உணவுகளுக்கு, சமுதாய - பொதுநல அமைப்புகளும், தனி ஆர்வலர்கள் பலரும் அனுசரணையளித்துள்ளனர்.
இன்னும் அனுசரணை தேவைப்படுவதால்,
ஏ.ஷாஹுல் ஹமீத் (தொடர்பு எண்: +91 96296 55780)
ஜெ.எம்.காதர் (தொடர்பு எண்: +91 99521 63734)
ஆகியோர் பள்ளி நிர்வாகத்தால் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வகைக்காக நன்கொடையளிக்க விரும்புவோர், இப்பொறுப்பாளர்களை காலம் தாமதிக்காமல் தொடர்புகொள்ளுமாறும் பள்ளி நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தகவல்:
‘ரிஃப்அத்’ உமர்
அரூஸிய்யா பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |