ஓமன் காயல் நல மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில், காயல்பட்டினம் நகர்நலனுக்காக ரூபாய் 50 ஆயிரம் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் கே.எம்.என்.முஹம்மத் அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹ்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஓமன் காயல் நல மன்றத்தின் (KOWA) வருடாந்திர கூட்டம், இம்மாதம் 28ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று, மன்றத்தலைவர் அப்துல் காதிர் பாதுல் அஸ்ஹப் தலைமையில், டாக்டர் எம்.எம்.எஸ்.மீராஸாஹிப், அப்துல் காதிர் (Oman Air) ஆகியோரது முன்னிலையில், தலைவர் இல்லத்தில் நடைபெற்றது.
மன்ற உறுப்பினர் ஹாஃபிழ் கே.எம்.என்.முஹம்மத் அபூபக்கர் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மன்றத் தலைவர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையை, மன்றப் பொருளாளர் ஸலீம் அல்தாஃப் கூட்டத்தில் சமர்ப்பிக்க, கூட்டம் அதற்கு ஒப்புதலளித்தது.
பங்கேற்றோரின் - மன்றம் மற்றும் நகர்நலன் குறித்த கருத்துப் பரிமாற்றங்களையடுத்து, பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - இக்ராஃ வருடாந்திர நிர்வாகச் செலவினத்திற்கு நிதி:
காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் வருடாந்திர நிர்வாகச் செலவின வகைக்காக, கடந்த ஈராண்டுகளில் தலா ரூபாய் 20 ஆயிரம் பங்களிப்புச் செய்தது போல, இன்ஷாஅல்லாஹ் நடப்பாண்டிலும் பங்களிக்கவும், இனி வரும் ஆண்டுகளிலும் ஆண்டுக்கு ரூபாய் 20 ஆயிரம் பங்களிப்புச் செய்யவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2 - ஷிஃபா வருடாந்திர நிர்வாகச் செலவினத்திற்கு நிதி:
ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்பின் வருடாந்திர நிர்வாகச் செலவின வகைக்காக, நடப்பாண்டு (2014) ரூபாய் 10 ஆயிரம் பங்களிப்புச் செய்யவும், இன்ஷாஅல்லாஹ் இனி வரும் ஆண்டுகளிலும் ஆண்டுக்கு ரூபாய் 10 ஆயிரம் பங்களிப்புச் செய்திடவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3 - ஷிஃபா அவசர கால சிகிச்சைக்கு நிதி:
ஷிஃபா அமைப்பின் மருத்துவ அவசரகால சிகிச்சை நிதி (Emergency Fund) வகைக்காக, ரூபாய் 20 ஆயிரம் பங்களிப்புச் செய்ய இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 4 - இக்ராஃ நிரந்தர உறுப்பினராக விண்ணப்பம்:
ஓமன் காயல் நல மன்றத்தை இக்ராஃ கல்விச் சங்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் நிரந்தரமாக இணைத்துக்கொள்ள, அதன் நிர்வாகத்திற்கு வேண்டுகோள் கடிதம் அனுப்புவதென தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 5 - ஒருங்கிணைப்பாளர் நியமனம்:
மன்றப் பணிகள் தொய்வின்றி தொடராக நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில், ஹாஃபிழ் கே.எம்.என்.முஹம்மத் அபூபக்கர் அவர்களை, மன்றத்தின் ஒருங்கிணைப்பாளராக நியமித்து தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 6 - மன்றக் கூட்டங்கள்:
இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 2015ஆம் ஆண்டு முதல், மன்றத்தின் சாதாரண கூட்டங்களை ஆண்டுக்கு 3 முறை கூட்ட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
அதனடிப்படையில், மன்றத்தின் அடுத்த சாதாரணக கூட்டத்தை, இன்ஷாஅல்லாஹ் 2015 மார்ச் மாதம் இறுதி வாரத்தில் கூட்டவும், கூட்ட நாள், நேரம் உள்ளிட்ட விபரங்களை பின்னர் அறிவிக்கவும் தீர்மானிக்கப்படுகிறது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. துஆ, ஸலவாத்துடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது, எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமன் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |