காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியருக்கு. வகுப்பு வாரியாக பல்சுவைப் போட்டிகள் நடத்தப்பட்டன.
ப்ரீ கே.ஜி, எல்.கே.ஜி, யு.கே.ஜி. மாணவ-மாணவியருக்கு மாற்றுடைப் போட்டி நடத்தப்பட்டது.
01ஆம் வகுப்பு மாணவ-மாணவியருக்கு பொம்மை செய்யும் (Doll Making) போட்டியும், 02ஆம் வகுப்பு மாணவ-மாணவியருக்கு களிமண் கொண்டு பொருட்கள் செய்யும் (Clay Model) போட்டியும் நடத்தப்பட்டது.
03, 04, 05ஆம் வகுப்பு மாணவ-மாணவியருக்கு, வீணாகும் பொருட்களைக் கொண்டு பயன்பாட்டுப் பொருட்களைச் செய்யும் போட்டி நடத்தப்பட்டது.
06, 07, 08ஆம் வகுப்பு மாணவியருக்கு கண்ணாடியில் ஓவியம் வரைந்து வண்ணந்தீட்டும் (Glass Painting) போட்டி நடத்தப்பட்டது.
09ஆம் வகுப்பு மாணவியருக்கு அணிகலன் செய்யும் (Jewel Making) போட்டி நடத்தப்பட்டது.
11, 12ஆம் வகுப்பு மாணவியருக்கு, நெருப்பின்றி உணவுப் பொருட்கள் செய்யும் (Cooking without Fire) போட்டி நடத்தப்பட்டது.
தகவல்:
K.M.T.சுலைமான்
துணைச் செயலாளர் – முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி
முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |