தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. காயல்பட்டினத்தில் நவம்பர் 20 அன்று (நேற்று) 16.30 மணி துவங்கி, இன்று (நவம்பர் 21) 11.00 மணி வரை தொடர் கனமழை பெய்தது. நகரின் அனைத்து சாலைகளிலும் மழை நீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நேற்று துவங்கி, இன்று வரை பெய்துள்ள தொடர் கனமழை காரணமாக, காயல்பட்டினம் பெரும்பாலும் மழை நீரால் நிறைந்துள்ளது. எங்கு பார்த்தாலும், மழை நீர் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டோடுகிறது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் உணவு ஆயத்தம் செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட தாழ்நிலைப் பகுதிகளில், அவ்வமைப்பின் தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் முஹ்ஸின் முர்ஷித் தலைமையில், தமுமுக - மமக நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து சுமார் 800 உணவுப் பொட்டலங்களை, தமுமுக ஆம்புலன்ஸ் வாகனத்தில் எடுத்துச் சென்று பொதுமக்களுக்கு வினியோகித்துள்ளனர்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினத்தில் மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |