தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. காயல்பட்டினத்தில் நவம்பர் 20 அன்று (நேற்று) 16.30 மணி துவங்கி, இன்று (நவம்பர் 21) 11.00 மணி வரை தொடர் கனமழை பெய்தது. நகரின் அனைத்து சாலைகளிலும் மழை நீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நேற்று துவங்கி, இன்று வரை பெய்துள்ள தொடர் கனமழை காரணமாக, காயல்பட்டினம் பெரும்பாலும் மழை நீரால் நிறைந்துள்ளது. எங்கு பார்த்தாலும், மழை நீர் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டோடுகிறது.
இன்று 11.00 மணியுடன் மழை பெய்வது நின்ற நிலையில், 17.30 மணியளவில் திடீரென மீண்டும் மழை பெய்தது. இம்மழை சுமார் 10 நிமிடங்கள் நீடித்தது. இன்று 23.00 மணி நிலவரப்படி, நகரில் சிறுமழை பெய்து வருகிறது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், மழையால் பாதிக்கப்பட்ட குலாம் சாஹிப் தம்பி தோட்டம், காட்டு தைக்கா தெரு தருவை உள்ளிட்ட தாழ்நிலைப் பகுதிகளில், பொதுமக்களுக்கு சுமார் 200 உணவுப் பொட்டலங்கள், மதியம் மற்றும் இரவு வேளை உணவுக்காக வினியோகிக்கப்பட்டுள்ளது. காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளியில் உணவு ஆயத்தம் செய்யப்பட்டு, வினியோகிக்கப்பட்டது.

இன்று 06.30 மணி முதல் 11.30 மணி வரை, அவ்வமைப்பின் நிர்வாகிகளும், அங்கத்தினரும் - மழைநீர் தேங்கிய பகுதிகளுக்குச் சென்று, பொதுமக்களிடையே நிலவிய கருத்துவேறுபாடுகளைக் களைந்து, தேவையான வழித்தடங்களில் மழை நீர் வழிந்தோட பொக்லைன் இயந்திரம் கொண்டு வெட்டி விட வழிவகை செய்துகொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







படங்கள்:
ஷம்சுத்தீன்
(தலைவர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினத்தில் மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|