காயல்பட்டினத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, நகரின் அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர் அதிகளவில் தேங்கியுள்ளது.
எல்.கே.மேனிலைப்பள்ளியின் தென்புறத்திலிருக்கும் குப்பை மேட்டிலுள்ள அசுத்தங்கங்களுடன் கலந்து வழிந்தோடும் மழை நீர், பள்ளி வளாகத்திற்குள் தேங்கி நிற்கிறது.







அதே கழிவு நீர், பள்ளியின் வடபுற சாலை முனையில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் வினியோகத் தொட்டிக்குள்ளும் தேங்கி, குடிநீருடன் கலக்கும் நிலையில் காட்சியளிக்கிறது.


போர்க்கால அடிப்படையில் இக்குறை சரிசெய்யப்படாவிடில், ஆபத்தான பின் விளைவுகளை எதிர்பார்க்கும் நிலையுள்ளது.
[படக்காட்சிகள் நவ. 20 அன்று பதிவு செய்யப்பட்டவை.]
எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினத்தில் மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |