தமிழகத்தில் அக்டோபர் மாதம் துவங்கிய வடக்கிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. காயல்பட்டினத்திலும் இந்த பருவ காலத்தில் பலத்த மழை பெய்துள்ளது. சில நாட்கள் மழை நின்றிருந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய துவங்கியுள்ளது.
இப்பருவ காலத்தில் மாநில அளவில் (நவம்பர் 20 நிலவரப்படி) வழமையை விட 5 சதவீதம் கூடுதலாகவும், தூத்துக்குடி மாவட்ட அளவில் வழமையை விட 31 சதவீதம் கூடுதலாகவும் மழை பெய்துள்ளது.
சென்னை வானிலை மையம், மழை அல்லது இடியுடன் கூடிய மழை - தென் கடலோர தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெய்யும் என முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் (நவம்பர் 20 காலை 8:30 மணி முடிய) இயல்பை விட 42 சதவீதம் குறைந்த மழை பெய்துள்ள தகவல்
இன்று (நவம்பர் 21) காலை 6:45 மணிக்கு எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross