காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் மாணவியர், பல்வேறு இடங்களில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளனர். விபரம் வருமாறு:-
(1) கருணா இன்டர்நேஷனல் க்ளப் சார்பில், கமலாவதி மேனிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட பள்ளிகளுக்கிடையேயான பல்வேறு போட்டிகளில், எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவியர் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளனர்.
பாட்டுப் போட்டியில், அப்பள்ளியின் 06ஆம் வகுப்பு மாணவியரான இசட்.ஆயிஷா, பி.ஆதம் மஹ்திய்யா ஆகியோர் இரண்டாம் பரிசை வென்றுள்ளனர்.
English Skit போட்டியில், 07ஆம் வகுப்பு மாணவியரான கே.ஆயிஷா, எம்.சங்கரி, என்.செல்ஷியா, ஏ.எஸ்.ஸஊதா ஸஃப்ரீனா, எஸ்.என்.ஹஸீனா ஹாத்தூன் ஆகியோர் மூன்றாம் பரிசை வென்றுள்ளனர்.
வினாடி-வினா போட்டியில், 08ஆம் வகுப்பு மாணவியரான எம்.பி.ஏ.யஹ்யா ருஸ்னா, எஸ்.ஐ.கதீஜா ஆகியோர் மூன்றாம் பரிசை வென்றுள்ளனர்.
ஓவியப் போட்டியில், 10ஆம் வகுப்பு மாணவியரான ஜெ.எஸ்.முர்ஷிதா, எம்.எஸ்.ஃபாத்திமா ஹமீதா ஆகியோர் மூன்றாம் பரிசை வென்றுள்ளனர்.
“தீவிரவாதத்திற்கெதிரான முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம்” எனும் தலைப்பில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (டீ.என்.டீ.ஜெ.) நடத்தும் - முஸ்லிமல்லாத மாணவ-மாணவியருக்கான சிறப்புக் கட்டுரைப் போட்டியில், எல்.கே.மெட்ரிக் பள்ளியியின்
நந்தினி ஈஸ்வரி (11ஆம் வகுப்பு), தவ்ஃபீக்கா (09ஆம் வகுப்பு), சந்தியா (09ஆம் வகுப்பு), பிருந்தா (09ஆம் வகுப்பு), திவ்யபாரதி (08ஆம் வகுப்பு), மதுமிதா (10ஆம் வகுப்பு) ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
செல்வாலயா நிறுவனம் சார்பில், பாரதியார் எனும் தலைப்பில் நடைபெற்ற தேர்வுப் போட்டியில், எல்.கே.மெட்ரிக் பள்ளியின் மாணவியர் கலந்துகொண்டு, பரிசுளை வென்றுள்ளனர். விபரம் வருமாறு:-
நடுநிலைப் பள்ளிகள் அளவிலான தமிழ்வழி போட்டியில்,
ஃபாத்திமா ரியாஸா (08ஆம் வகுப்பு) முதற்பரிசையும்,
ஃபாத்திமா ரிஃப்கா (06ஆம் வகுப்பு) இரண்டாம் பரிசையும்,
சித்தி ஹஃப்ஸா (08ஆம் வகுப்பு) மூன்றாம் பரிசையும் பெற்றுள்ளனர்.
நடுநிலைப்பள்ளிகள் அளவிலான ஆங்கில வழி போட்டியில்,
ஜுலைஹா அஃப்ரா (07ஆம் வகுப்பு) முதற்பரிசையும்,
ஆமினா முஸ்ஃபிரா (08ஆம் வகுப்பு) இரண்டாம் பரிசையும்,
சித்திமா (08ஆம் வகுப்பு) மூன்றாம் பரிசையும் வென்றுள்ளனர்.
உயர்நிலைப் பள்ளிகள் அளவிலான போட்டியில், எல்.கே.மெட்ரிக் பள்ளியின் 09ஆம் வகுப்பு மாணவியரான
கதீஜா நூரிய்யா முதற்பரிசையும்,
கே.ஃபரீதா இரண்டாம் பரிசையும்,
சந்தியா மூன்றாம் பரிசையும் வென்றுள்ளனர்.
பரிசு பெற்ற மாணவியரை, பள்ளியின் தலைமையாசிரியை மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் பாராட்டினர்.
எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |