Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:39:49 AM
ஞாயிறு | 10 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1928, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:0715:2818:0019:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்13:27
மறைவு17:54மறைவு00:42
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:47
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:06
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14877
#KOTW14877
Increase Font Size Decrease Font Size
சனி, நவம்பர் 15, 2014
DCW விரிவாக்கம் வழக்கு: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதில் தாக்கல்! டிசம்பர் 2க்கு வழக்கு ஒத்திவைப்பு!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3697 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

DCW தொழிற்சாலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நவம்பர் 13 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-

DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு – KEPA சார்பில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அவ்வழக்கு (APPEAL NO.37/2014 [SZ]) மே 26 அன்று அனுமதிக்காக - நீதிபதி எம்.சொக்கலிங்கம் மற்றும் நிபுணர் உறுப்பினர் பேராசிரியர் டாக்டர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், வழக்கை அனுமதித்து, எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 10, 2014 தேதிக்கு ஒத்திவைத்தது.

இவ்வழக்கு ஜூலை 10 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் எதிர்மனுதாரர்களாகிய ஆறு தரப்புகளில், CHOLAMANDALAM MS RISK SERVICES LIMITED நிறுவனம் ஆஜராகவில்லை. அந்நிறுவனத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி எம்.சொக்கலிங்கம் உத்தரவிட்டார்.

எஞ்சிய ஐந்து எதிர் மனுதாரர்களாகிய மத்திய அரசு (அதன் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக செயலாளர்), தமிழக அரசு (அதன் சுற்றுச்சூழல் அமைச்சக செயலாளர்), DCW தொழிற்சாலை (அதன் நிர்வாக இயக்குனர்), தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (அதன் உறுப்பினர் - செயலாளர்), இத்திட்டத்திற்கு - DCW தொழிற்சாலை சார்பில் ஆவணங்கள் தயாரித்த PURE ENVIRO ENGINEERING PRIVATE LIMITED ஆகிய்வர்கள் சார்பாக அவர்களின் வழக்கறிஞர்கள், பதில்கள் சமர்ப்பிக்க கூடுதல் கால அவகாசம் கேட்டனர். அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் - வழக்கினை ஆகஸ்ட் 28, 2014 க்கு ஒத்திவைத்தது.

ஆகஸ்ட் 28 அன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தப்போது, தீர்ப்பாய நீதிபதிகளில் ஒருவரான நிபுணர் உறுப்பினர் பேராசிரியர் டாக்டர் ஆர்.நாகேந்திரன் விடுமுறையில் சென்றுள்ள காரணத்தால், நீதிபதி ம.சொக்கலிங்கம் அறையில் விசாரணை நடந்தது. அப்போது, கடந்தமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்ட CHOLAMANDALAM MS RISK SERVICES LIMITED நிறுவனம், தனது சார்பாக வழக்கறிஞரை நியமிப்பதாக கூறியது.

மேலும் - DCW நிறுவனம் மற்றும் அதற்கு ஆவணங்கள் தயார் செய்துக்கொடுத்த PURE ENVIRO ENGINEERING PRIVATE LIMITED நிறுவனம் ஆகியவை சார்பாக பதில்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மத்திய அரசு (அதன் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக செயலாளர்), மாநில அரசு (அதன் சுற்றுச்சூழல் அமைச்சக செயலாளர்), தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (அதன் உறுப்பினர் - செயலாளர்) மற்றும் CHOLAMANDALAM MS RISK SERVICES LIMITED நிறுவனம் ஆகியோர் பதில்கள் தாக்கல் செய்யாத நிலையில் வழக்கு, நவம்பர் 13 அன்று மீண்டும் விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

நவம்பர் 13, 2014 மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பின் வழக்கறிஞர்களும் ஆஜராகி இருந்தனர். அன்றைய தினத்தின் 18வது வழக்காக இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது.





விசாரணையின் போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக அதன் வழக்கறிஞர் ரீதா சந்திரசேகர் பதிலை தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைச்சகம் கூடுதல் கால அவகாசமும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2 வார கால அவகாசமும், CHOLAMANDALAM MS RISK SERVICES LIMITED நிறுவனம் 4 வார கால அவகாசமும் கோரினர். இதனை அடுத்து - வழக்கு டிசம்பர் 2, 2014 தேதிக்கு, பதில்கள் தாக்கல் செய்ய ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வழக்கில் காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) சார்பாக வழக்கறிஞர்கள் டி.நாகசைலா, டாக்டர் வி.சுரேஷ் மற்றும் பிரீஸ்ட்லி மோசஸ் ஆகியோர் ஆஜராகின்றனர்.

மத்திய அரசு சார்பாக வழக்கறிஞர் திருமதி சி.சங்கமித்திரை, DCW நிறுவனம் சார்பாக வழக்கறிஞர்கள் ஆர்.வெங்கட்டவதன் மற்றும் நிவேதிதா, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக வழக்கறிஞர் திருமதி ரீதா சந்திரசேகர், தமிழக அரசு சார்பாக வழக்கறிஞர்கள் எம்.கே. சுப்ரமணியம் மற்றும் எம்.ஆர்.கோகுல் கிருஷ்ணன், PURE ENVIRO ENGINEERING PRIVATE LIMITED நிறுவன்ம் சார்பாக வழக்கறிஞர் வி.ஸ்ரீனிவாச பாபு, CHOLAMANDALAM MS RISK SERVICES LIMITED சார்பாக வழக்கறிஞர் பி.பிரேம்குமார் ஆகியோர் இவ்வழக்கில் ஆஜராகின்றனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நவ.11 நள்ளிரவில் கனமழை!  (13/11/2014) [Views - 2956; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved