செய்தி: நகரில் தேங்கும் மழை நீர் வழிந்தோட நிரந்தரத் தீர்வு கோரி இ.யூ.முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில், அனைத்துக் கட்சிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அது வேற வாய்! இது........??? posted byHameed Rifai (Jeddah (ksa))[26 November 2014] IP: 37.*.*.* | Comment Reference Number: 38284
இந்த ஆர்ப்பாட்டத்தில் நான் எதிர்பார்த்தது போலவே முழுக்க முழுக்க தலைவி எதிர்ப்பு புராணம்தான்! எதிர்க்கவே கூடாது என்பதல்ல எனது கருத்து. உண்மையைச் சொல்லி எதிர்க்க வேண்டும். கண்ணியமாகப் பேச வேண்டும்.
திமுகவுடன் இருந்த நீண்ட கால உறவை அறுத்து, அதிமுகவுடன் முஸ்லிம் லீக் கூட்டணி கண்ட காலகட்டத்தில், திமுக தலைவர் கலைஞரைக் குறித்து அப்துஸ்ஸமது ஸாஹிப் அவர்கள் தான் பேசிய உரைகளிலெல்லாம் மிகக் கண்ணியமான வாசகங்களையே பயன்படுத்தினார்கள். அவர்களது பாரம்பரியத்தில் வந்தவர்கள் என்று சொல்ல சிறிதும் தகுதியற்ற சிலர்தான் இன்று காயல்பட்டினத்தில் தாய்ச்சபையைக் கைக்குள் வைத்துக்கொண்டிருக்கிறார்களோ என்று கருதத் தோன்றுகிறது எனக்கு.
இந்த மழைக்காலத்தில், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட சுகாதார இயக்குநர், நகராட்சி நிர்வாக மண்டல அலுவலர் என பல்வேறு அரசு உயரதிகாரிகளையும், அமைச்சர்களையும் (உங்கள் ஆர்ப்பாட்ட அறிவிப்புக்கெல்லாம் முன்பாகவே) தொடர்புகொண்டு, இந்த ஊருக்குத் தேவையானவற்றையெல்லாம் கோரிக்கையாக வைத்துக்கொண்டிருக்கிறார் நகர்மன்றத் தலைவி அவர்கள் என்பதை நான் விசாரித்து அறிந்துள்ளேன். அதன் விளைவாக, அண்மையில் அமைச்சர், மாவட்ட ஆட்சியர் வருவாய் அதிகாரி ஆகியோர் ஊருக்கு வந்து ஆய்வு பாதிப்புகளைப் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
அப்படியிருக்க, ‘தலைவி எதுவுமே செய்யவில்லை’ என மல்லுக்கட்டிக்கொண்டு கூற முனைவதன் நோக்கமென்ன? ஏதோ எதிர்பார்ப்பில் இருந்தவர்கள் ஏமாற்றம் கண்டதால் ஏற்பட்டுள்ள கோபம் என்று இதை எடுத்துக்கொள்ளத் தோன்றுகிறது.
“22-11-2014 சனிக்கிழமை அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் என்றுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. எவரையும் கண்டிக்கும் போராட்டம் என்று அறிவிக்கப்படவில்லை.” (C & P)
இது நண்பர் மக்கி அவர்கள் தெரிவித்த வாசகம். அவரது இந்த உறுதிமொழியையெல்லாம் தாண்டி ஆர்ப்பாட்டத்தில் பேசப்பட்டதற்கு அவரது விளக்கம் என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.
ஆண்டவரால் ‘புனிதர்’ பட்டம் வழங்கப்பட்டவர்களெல்லாம் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, அவரது வழமையான பாணியில் மிகவும் கண்ணியமாக (?) பேச தாய்ச்சபை தங்கங்கள் களம் அமைத்துக் கொடுத்துள்ளதை அறியும்போது உடம்பெல்லாம் புல்லரிக்கிறது.
நமதூரில் 28 பள்ளிவாசல்கள் உள்ளன என்று நான் அறிந்துள்ளேன். ஆனால், அஹ்மது நெய்னார் பள்ளி சார்பில் மட்டும் ஒருவர் பேசியிருக்கிறார். புதுப்பள்ளி, கொடிமர பள்ளி, குருவித்துறைப் பள்ளி, மகுதூம் பள்ளி ஜமாஅத்தார்களெல்லாம் பேசவில்லையே ஏன்?
இந்த ஊரிலேயே அலுவலகம் அமைத்து பல அமைப்புகள் இயங்கிக்கொண்டிருக்க, நோட்டீஸ் விடுவதற்காக மட்டுமே இயங்கும் ஒருநபர் அமைப்பு எல்லாம் அழைக்கப்பட்டு, முகவரியுடன் இயங்கும் பெரும்பாலான அமைப்புகள் கண்டுகொள்ளப்படாதது ஏன்?
எந்தெந்த ஜமாஅத், பொதுநல அமைப்புகளுக்கு எல்லாம் அழைப்பு அனுப்பப்பட்டது? அவர்களில் யாரெல்லாம் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்கள் என்பதையும் அறிய ஆவல்.
உங்கள் விளக்கத்தைப் பார்த்த பிறகு, தேவைப்பட்டால் தொடர்கிறேன்......
ஒரு சிறிய வேண்டுகோள்: இந்தக் கருத்துப் பதிவைப் பார்த்த பிறகு, என் பெற்றோரிடம் எச்சரிக்கை விடுக்க புதிதாக இருவரை அனுப்பி வைக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன். (ஏற்கனவே அனுப்பியவர்கள் வேண்டாம், ப்ளீஸ்...)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross