செய்தி: நகரில் தேங்கும் மழை நீர் வழிந்தோட நிரந்தரத் தீர்வு கோரி இ.யூ.முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில், அனைத்துக் கட்சிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
உள்குத்து,வெளிகுத்து posted byNIZAR (kayalpatnam)[27 November 2014] IP: 59.*.*.* India | Comment Reference Number: 38291
முஸ்லீம் லீக் தலைமையில் நடந்த இந்த அணைத்து கட்சி மற்றும் பொதுநல அமைப்புகளின் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் மக்கள் என்ன உள்குத்து,வெளி குத்துக்களை கணிச்சாங்க,என்னேவேன்றே புரியவில்லை ஏதாவது புரிந்தால் சொல்லுங்கன்னே,சொல்லுங்க.ஊரே வெள்ளத்தில் மிதந்தது,யாரை கூப்பிட என்ன செய்ய என்று விழி பிதுங்கி நின்ற வேலையில் முஸ்லீம் லீக் தன் அலுவலகத்தை வெள்ள நிவாரண அலுவலமாக மாற்றியது.தண்ணீரில் மிதக்கும் மக்களை காப்பாற்ற உடனடியாக அணைத்து கட்சி மற்றும் பொதுநல அமைப்புகளை கூட்டியது.அனைவரின் ஏகோபித்த முடிவாக கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்த முடிவு செய்தது.காற்று மழை என்ற கடுமையான சூழ்நிலையிலும் திரளான மக்கள் கலந்து கொண்டார்கள்.போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் எதிர் திசையிலும் நின்றார்கள்.ஆர்ப்பாட்டத்தின் விளைவு மாவட்ட நிரவாகத்தின் கவனம் காயல் பக்கம் திரும்பியது.
நெடுஞ்சாலை துறை அனுமதியுடன் ரோடுகள் வெட்டப்பட்டு நிலைமை கட்டுக்குள் வந்தன.தெரு தெருவாக பொக்லைன் மூலம் ரோடுகளின் ஓரங்கள் வெட்டப்பட்டு தண்ணீர் ஓடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மிகவும் பாதிக்க பட்ட இடங்களில் அன்றே லயன்ஸ் கிளப் மூலம் உணவுகள் வழங்கப்பட்டன.அதை தொடர்ந்து தனியார்களின் உதவியில் லயன்ஸ் கிளப் புஹாரி ஹாஜியார்,மற்றும் துளிர் சேகனா ஹாஜி தலைமையில் தொடர்ந்து உணவு வழங்கப்பட்டது.கடுமையான வானிலை சூழ்நிலையிலும் மலையிலும் நனைந்து கொண்டே சில கவுன்சிலர்கள், பொதுநல ஊழியர்கள்,மாற்று மத சகோதரர்கள் என அனைவரும் வெள்ள நிவாரண பணியில் உழைத்து மிகவும் பெருமைக்குரிய விசயமாக அமைந்தது.அடிக்கடி முஸ்லீம் அலுவலகத்தில் நிலைமை பற்றி ஆய்வுகூட்டங்கள் நடத்தப்பட்டது.இப்படி இக்கட்டான சூழ்நிலையில் முஸ்லீம் லீக்கும்,லயன்ஸ் க்ளப் மற்றும் பொதுநல அமைப்புகள் அணைத்து ஜமாத்துகள் நடத்திய இந்த பொதுசேவை யை உள்ளார்ந்த நோக்கம் என்று சொல்வது நியாமாகுமா?அப்படி என்ன நோக்கம் என்று வெளிப்படுத்தலாமே?உண்மையில் இந்த வெள்ள நிவாரண பணியில் தங்களை அர்ப்பணித்து கொண்ட அனைவருக்கும் லயன்ஸ் க்ளப் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெர்வித்து கொள்கிறேன்.இதை போன்ற இயற்கை இன்னல்கள் இருந்து இறைவன் நம் ஊரை காப்பானாக,,,,,,,,,,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross