அல்லா நினைத்தால் அரை நொடியில்...... posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[27 November 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38297
தென்னை மரத்தில் தேள்கொட்டினால் பனைமரத்தில் நெறி கட்டியதாம், என்பது போல சாகுபுரம் எங்கிருக்கிறது செய்துங்க நல்லூர் எங்கிருக்கிறது.அந்தஆலையினால் பாதிக்கப்படுபவர்கள் யார், முற்றிலும் முஸ்லிம்கள் வாழும் ஒரு ஊரும்,அதைச் சுற்றியுள்ள பகுதி மக்களும்தான்..எனக்கு இரண்டு கண்ணுபோனாலும் பரவாயில்லை எதிரிக்கு ஒருகண் போகவேண்டும் என்கிற வக்கிர எண்ணத்தால்,காயல் நகரை சுற்றியுள்ளவர்கள் பாதித்தாலும் பரவாயில்லை காயல்மா நகரம் முற்றிலும் மண்ணாகப்போகனும் என்ற மேன்மைக்குறிய எண்ணம்தான்!
செய்துங்க நல்லூர் சிங்கங்களே இங்கு வந்து பாருங்கள்,இந்த ஆலையை எதிர்த்து போராடும் போராட்டக்களத்தில் இங்குள்ள இந்து முன்னணி சகோதரர்களும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் அவர்களிடமாவது கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள்.அந்த நல் எண்ணத்துடைய நியாயவாதிகளின் நெஞ்சத்தில் உங்கள் நஞ்சு எண்ணத்தை தடவத்துடிக்காதீர்கள்!
ஆறாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை வேறெடுக்க வேண்டுமென்ற குறிக்கோளல்ல இவ்வாலையை எதிர்ப்பவர்களுக்கு,அந்த ஆலையிலிருந்து வெளியாகும் கழிவுகளின் உயிர்க்கொல்லி நோய்க்கிருமி பரவாமல் இருக்ககூடிய பாதுகாப்பு உத்தரவாதத்தை சரியான செயல்முறை சான்றுகளோடு நிரூபித்துவிட்டு,நல்லதொரு பாதுகாப்போடு அந்த ஆலை செயல்படுமேயானால் அதற்க்கான அத்தனை ஆதரவுகளையும் தரத்தயாராக இருக்கிறோம்.ஆகவே ஆறாயிரம் குடும்பங்களின் வாழ்வு என்ற போர்வையில் 60 ஆயிரம் பேர்களை பலிகொடுக்கும் பலிபீடமாக அது மாறக்கூடாது என்பதுதான் இந்த ஆலையை எதிர்ப்பவர்களின் ஏக்கமுடைய எதிர்பார்பாகும்!
DCW என்ற பெயர், ( D =தாவுது C =கெமிக்கல்.W = ஒர்க்ஸ்)...... "தாவுது கெமிக்கல் ஒர்க்ஸ்" என்ற பெயரில் இயங்கப்படுமேயானால்,இதுவரை இமையமலையே எகிறும் அளவிற்கு எல்லாத்தரப்பிலிருந்தும் எதிர்ப்பலைகள் தோன்றி இந்த ஆலையை இழுத்து மூடாதவரைக்கும் கண் மூட மாட்டார்கள்.ஆனால் இந்த ஆலையோ குஜராத் கூட்டத்தோடு ஒன்றன கலந்திருக்கும் கோடீஸ்வரர்களுக்குறியதல்லவா அவ்வளவு எளிதில் இதை மூடவைத்து விடுவார்களா அதுவும் இப்போதுள்ள ஆட்சியில்!
எந்த இரும்புத்திறன் கொண்டஆட்சியாக இருந்தாலும் அதன் அநியாயங்களும்,அட்டூழியங்களும் எல்லைமீறி செல்லும் பொழுது எல்லாம் வல்ல அல்லாஹ் அவை அனைத்தையும் அணுஅணுவாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான்,அவன் அரை நொடியில் முடிவு பண்ணினாலே போதும் பஸ்ப்பமாகி பொசுங்கி விடுவார்கள்.பொறுத்திருந்து பார்க்கத்தான் போகிறோம் படைத்தோன் துணையுடன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross