Re:...வாழ்த்துக்கள் posted bymackie noohuthmbi (kayalpatnam)[03 December 2014] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 38337
புதிய தலைமுறையின் விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். குறிப்பாக எனது அன்பு மருமகன் முஹம்மது இப்ராஹீம் 48 அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
புதிய தலைமுறை இதழில் சில கட்டுரைகள் வெளிவரும். அதன் அடியில் இதை பற்றிய உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் நல்ல கருத்துக்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருப்பார்கள். அப்படி எழுதி பரிசு பெற்றவர்களில் நானும் ஒருவன்.
இந்த சாதனையாளர்கள் வெறும் எழுத்துக்களால் அல்ல, நாட்டில் ஒரு முக்கியமான முன்னேற்ற பாதைக்கு வழி வகுத்துள்ளார்கள். இவர்களின் கண்டுபிடிப்புக்கள் விவசாய உலகில் ஒரு மறுமலர்ச்சி. விருது வழங்கி கௌரவிப்பவர்கள் புதிய தலைமுறையினருக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்கும் ஒரு அற்புதமான வார இதழின் நிறுவனர்கள். தொலைக் காட்சி யுகத்தில் ஒரு புதிய கோணத்தை ஒரு புதிய பார்வையை மக்கள் உள்ளங்களில் வேரூன்ற செய்தவர்கள். அவர்கள் விருது வழங்குகிறார்கள் என்பது பெருமைக்குரிய விஷயம்.அதே வேளை பொற்கிழி வழங்கி கௌரவித்து இருக்க வேண்டும் என்பது எனது அபிப்பிராயமும் வேண்டுகோளும்.
விளையாட்டு வீரர்களுக்கு கோடி கோடியாக அள்ளிக் கொடுக்கிறார்கள். வென்றால் WINNER என்று ஒருபரிசு - தோற்றால் RUNNER என்று ஒரு பரிசு. இங்கே விவசாயிக்கு என்ன மதிப்பு. புதியதலைமுறை எனது கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும் தமிழக அரசுக்கும் பரிந்துரை செய்ய வேண்டும். ஊக்கப் படுத்துவதும் பாராட்டுவதும் அவர்கள் சாதனைகளுக்கு மேலும் ஒரு உந்து சக்தியாக அமையும்.
என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்
ஏன் கையை எந்த வேண்டும் வெளி நாட்டில்.
ஒழுங்காய் பாடுபடு வயல்காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்
என்ற புரட்சி தலைவரின் பாடல் நினைவுக்கு வருகிறது. வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross