செய்தி: வழக்குச் சிக்கல்களிலிருந்து ஜெயலலிதா விடுபடுவதற்காக காயல்பட்டினம் உள்ளிட்ட இந்திய தர்காக்களில் வக்ஃப் வாரியத் தலைவர் தமிழ்மகன் உசேன் பிரார்த்தனை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இறைவனிடம் கை ஏந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை... posted bymackie noohuthmbi (kayalpatnam)[05 December 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 38356
வக்ப் வாரிய தலைவராக தமிழகத்தின் இஸ்லாமிய தலை நகருக்கு வருகை தந்துள்ள தமிழ் மகன் ஹுசைன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
வக்ப் வாரியத்துக்கு உள்பட்ட பள்ளிவாசல்களின் வருமானங்கள் செலவினங்கள் பற்றி ஆய்வு செய்து ஆவன செய்ய வந்துள்ள உங்களை வருக வருக என்று வரவேற்கிறோம்.
வக்ப் போர்டு தலைவராக நாகூர் ஹனீபா, கவிக்கோ அப்துர் ரஹ்மான் ஹைதர் அலி போன்றவர்கள் பதவி வகித்த காலங்கள் நினைவுக்கு வருகிறது.
இன்னிசை விருந்தளிப்பவர்களும் அரசியல் தலைவர்களும் இந்த பொறுப்புக்கு நியமிக்க படுகிறார்களே தவிர ஒரு மௌலவி ஆலிம் மார்க்க மேதை யாரும் இதுவரை அந்த பொறுப்பில் அமர்த்தப்பட்டதாக தெரியவில்லை.
வக்ப் விஷயங்களில் திருமறையும் நபிகளாரின் வழிமுறையும் என்ன சொல்கின்றது ஷரீஅத் சட்டங்கள் என்ன என்று தெளிவாக சொல்லக் கூடியவர்கள் அவர்கள்.
அவர்களை புறந்தள்ளி விட்டு ஆட்சியில் யார் இருக்கிறார்களோ அவர்களில் ஒருவருக்கு இந்த பாரிய பொறுப்பு கொடுக்கப்பட்டால் அவரவர்கள் கட்சியின் தலைவரின் ஆணைப் படி அவர்கள் நடக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். இதற்கு தாங்களும் விதி விலக்கல்ல.
இன்னும் ஒருபடி மேலே சென்று மக்களின் தலைவர் என்று இப்போது அழைக்கப் படும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மீண்டும் முதல்வராக வேண்டும் என்று நீங்கள் சென்ற தர்காக்கள் தோறும் வேண்டுதல் வைத்ததாக தெரிகிறது.
“தமிழகத்து தர்காக்களை பார்த்து வருவோம் தூய வழி காட்ட சொல்லி கேட்டு வருவோம்” என்று காயல் கவிஞர் ஷேய்க் முஹம்மது அவர்கள் பாடினார்கள்.
இறை நேச செல்வர்களுக்காக து ஆ கேட்பது என்ற நிலை மாறி இறை நேச செல்வர்களிடமே தங்கள் தேவைகளை நிறைவேற்றக் கோரும் பழக்கம் நம்மிடம் இருக்கிறது.
வீட்டிலே உப்பு இல்லை என்று ஒரு நபி தோழர் பள்ளிவாசலுக்கு வந்து இரண்டு ரக அத் தொழுது அதை அல்லாஹ்விடம் வேண்டினார்கள். வீட்டில் சாப்பிடுவதற்கு உணவு இல்லை என்று இன்னொரு நபி தோழர் மஸ்ஜிதுன் நபவிக்கு வந்து அல்லாஹ்விடம் கோரிக்கை வைத்து அதைப் பெற்றுக் கொண்டார்கள் என்று நபிகள் நாயகம் சொல்லிக் காட்டியதை புகாரி ஷரீப் போன்ற நூல்களில் காண்கிறோம்.
இதை எல்லாம் தாண்டி ஒரு குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப் பட்டு முதல்வர் பதவியையும் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்து நிற்கும் ஒரு சாதாரண பெண்மணிக்காக இந்த இறை நேச செல்வர் களிடம் நீங்கள் வேண்டிக் கொண்டது மனதை நெருட செய்கிறது.
முன்னாள் முதல்வர் அவர்கள் 10 ஆண்டுகள் தேர்தலிலே நிற்க முடியாது என்று அரசிதழில் வெளியிட்ட அரசும் இதே அரசுதான். அப்படி இருக்க உங்கள் கோரிக்கை எப்படி நிறைவேறும்.
குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கெல்லாம் இறை நேச செல்வர்கள் பரிந்துரை செய்வது என்று வந்தால்நாளை கலைஞர் மகள் கனி மொழிக் கும் ராஜாவுக்கும் – ஏன் பாபர் மசூதியை இடித்து நமது இதயங் களை சுக்கு நூறாக்கி விட்ட அத்வானி போன்றவர்களும் அந்த கட்சியை சார்ந்தவர்களும் நாகூர் முதல் அஜ்மீர் வரை – காவேரிப் பட்டினம் முதல் காயல்பட்டினம் வரை வந்து தர்காக்களில் து ஆ கேட்க முயற்சிப் பார்கள்.
அவர்களை தடுக்க முடியாமல் போய்விடும். கேட்டால் இது ஜனநாயக நாடு. ஆளுக்கொரு சட்டமா என்று ஆர்ப்பாட்டம் செய்வார்கள்.
புரிந்து கொண்ட நல் புத்திசாலிகள் புண்ணியம் சுமந்து கொண்டார்கள்.
தயவு செய்து வக்ப் வாரியம் பள்ளி வாசல்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தர ஆவன செய்யுங்கள். கோடிக் கணக்கான வக்ப் சொத்துக்கள் முஸ்லிம்களாலேயே சூறையாடப் பட்டுக் கொண்டிருக்கிறதே, அதற்கு ஒரு முடிவுகட்ட உங்கள் பதவிக் காலத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இஸ்லாமிய சமுதாயம் உங்களை நன்றியுடன் பார்க்கும். இல்லா விட்டால் பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று என்று மக்கள் நினைத்து உங்களை புறம் தள்ளி விடுவார்கள்.
2016 ஆம் ஆண்டு அல்லாஹ் யார் கையில் ஆட்சியை கொடுப்பானோ யார் அறிவார். அந்த அல்லாஹ்வே அறிவான். எனவே உங்கள் பதவி காலத்தை இந்த சமுதாய மேன்மைக்காக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கட்சி – ஆட்சி – எல்லாம் கானல் நீர். கலையும் கனவுகள்.
எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை நினைத்தால் வாழ்க்கையில் தோல்வி இல்லை.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல் யார் என்று ஊர் சொல்லவேண்டும்.
இவை புரட்சி தலைவர் நமக்கு சொல்லி சென்ற வைர வரிகள்.
“அழகிய தமிழ் மகன்” அவர்கள் சிந்தனைக்கு இதனை சம்பர்ப்பிக்கிறேன்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross