செய்தி: வழக்குச் சிக்கல்களிலிருந்து ஜெயலலிதா விடுபடுவதற்காக காயல்பட்டினம் உள்ளிட்ட இந்திய தர்காக்களில் வக்ஃப் வாரியத் தலைவர் தமிழ்மகன் உசேன் பிரார்த்தனை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[05 December 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38358
சகோதரர் மக்கி நூஹுத்தம்பி காக்கா அவர்கள் அறிவது,
தங்களின் கருத்து பதிவின்படி"கலைஞர் மகள் கனிமொழி,ராஜா ஆகியோர் குற்றபின்னணியில் இருக்கும் குற்றவாளிகள் ஆகவே கனிமொழிக்கும், ராஜாவுக்கும் தண்டனை கிடைக்கும் அவர்களுக்காகவும் நாளைக்கு தர்ஹாகளுக்கு பிரார்த்தனைக்காக வருவார்கள் என்ற தோரணையில்
எழுதிஇருக்கிறீர்கள்!
கனிமொழிக்கும்,ராஜாவுக்கும் எந்த கோர்ட்டில் எத்தனை வருடம் எந்த நீதிபதி தண்டனை தீர்ப்பை வழங்கி இருக்கிறார்.ஏன் இந்த இதயங்கனிந்த ஏக்கமுடைய எதிர்பார்ப்பு.ஒருவர் குற்றவாளி என்ற தீர்ப்பைபெற்றால் அவரோடுமட்டும் உங்கள் கருத்துபதிவு நிற்க ஏன்மனம்வருவதில்லை இன்றைக்கு இவர்,நாளைக்கு அவருக்கு கிடைக்கப்போகின்ற இதைவிட பெரிய பரிசை பரவசமுடனும்,மகிழ்வுடனும் எதிநோக்கி இருக்கும் உங்களின் உள்ளத்தை நினைத்தால் உண்மையிலேயே மெய்சிலிர்க்கிறது.
குறைவான விலை மின்சாரத்தை நிறைய விலை கொடுத்து வாங்கி தன் வசதியை சேர்க்கின்றவருக்கும், மூன்று ரூபாய்க்கு மேல் விறககூடிய தொலைபேசி கட்டணத்தை ஒருரூபைக்கு விற்று மக்களுக்கு லாபத்தையும் அரசுக்கு நஷ்டதையும் எற்படுதியவர்களுக்குள்ள வித்தியாசத்தை உணர்வீர்கள் என்று நம்புகிறேன்!
ஒருவேளை நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து அது ஏமாற்றமாக மாறி கனிமொழி, ராஜாவின் குற்றங்கள் சரியாக நிரூபிக்கப்படவில்லை என்று தீர்ப்புவந்தால்,ஐயோ வடைபோச்சே என்று அதிர்ச்சியில்அப்படியே அல்லாடி விடுவீர்கள் போலிருக்கிறதே.எவ்வளவு அக்கறை அவர்களுக்கு விலங்கிட்டு பார்க்கும் மகிழ்வில்.பலகீன இதயமுடயவராக நீங்கள் இருந்தால் இன்னும் பக்குவமாக பார்த்து இருந்து கொள்ளுங்கள் ஆண்டவன் காப்பாற்றுவானாக!
வக்பு வாரிய தலைவரின் வழிபாட்டுச்செயலானது அவருடைய சொந்த விருப்பமானது,அவரது நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. அதில் தலையிட நமக்கு உரிமை இல்லை.வக்பு வாரிய செயல்பாட்டில் ஏதும் குற்றம் குறை இருந்தால் சுட்டிக்காட்டலாமே தவிர,அவரின் இறை நம்பிக்கையையோ ,இறைநேசர்களின் நம்பிக்கையையோ நாம் விமர்சிப்பது சரியல்ல,அவரின் இறை வழிபாட்டு நம்பிக்கையையும், எண்ணத்தையும் நம்மீது அவர் திணிக்காதவரை!
அவரின்நடவடிக்கையை வீரமுடன்விமர்சிக்க முன்வருவீர்களேயானால்,
அவருக்கு பின்னால் பல்லாயிரக்கணக்கானோர் வரிசையுடன் நிற்கிறார்களே அவர்களை உங்களால் திருத்தமுடியுமா?
நம்மை சாடாதவரையில் நம் வழியில் நாம் செல்வதுதான் சாலச்சிறந்தது! .
ஆகவே எது நீதியுடைய நடவடிக்கையோ அதை நேர்மையுடன் ஏற்றுக்கொள்வதை விட்டுவிட்டு, எதிர்வீட்டுக்காரன் எப்போது கம்பி எண்ணுவான் என்று ஏக்கத்துடன் எதிர்பார்க்கும் இறுகிய இதயத்திற்கு சொந்தக்காரர்கள் பட்டியலில் உங்கள் பெயரையும் பதிவு செய்ய முயலாதீர்கள் அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross