ஒரு நடைபயணம் போட்டால் அனைத்தையும் மக்கள் மறந்து விடுவார்கள் என்ற தவறான எண்ணம் இனி எடுபடாது..! posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[09 December 2014] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 38387
ஈழத்தின் முழு முதல் எதிரி பிஜேபி என நன்கு தெரிந்தும் பதவிகள் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு பல தமிழ் ஆர்வலர்கள் மற்றும் ஈழ விடுதலை விரும்பிகளின் வேண்டுகோளையும் மீறி அவர்களுடன் கூட்டணி வைத்துவிட்டு, இன்று செல்லாக்காசாக்கப்பட்டு அவர்கள் தூக்கி எறியும் நிலை வந்துவிட்ட பிறகு கூட்டணியை விட்டு வெளியேறி ‘ தமிழினத்துக்காக வெளியேறினோம்’ என நீங்கள் பூச்சுற்றுவதை நம்புவதற்கு தமிழர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை திரு.வையாபுரி கோபால்சாமி அவர்களே....
நீங்கள் கூறுவது போலவே ஒரு வேளை தமிழர் நலனுக்காக கூட்டணி வைத்திருந்தாலும் பதவி ஏற்பு விழாவுக்கு ராஜபக்ஷேவுக்கு ரத்தின கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டபோதே கூட்டணியை விட்டு வெளியேறி இருந்தால் ‘தமிழர் நலனில் அக்கறை ‘ என்ற நாடகம் எடுபட்டு இருக்கும். என்ன செய்வது அப்போதெல்லாம் எப்படியாவது ஒரு ராஜ்யசபா சீட்டும் அமைச்சர் பதவியும் கிடைக்கும் என்று காத்திருந்தன் விளைவு இன்று உங்கள் நாடகம் தமிழ் கூறும் நல்லுலகால் எள்ளி நகையாடப்படுகிறது. கண் கெட்ட பின்னே வரும் சூரிய உதயத்தால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross