தொழில் முனைவோர் முகாம் posted byNIZAR (kayalpatnam)[11 December 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 38396
தமிழக அரசின் மாவட்ட தொழில் மையம் தூத்துக்குடியில் செயல்பட்டு வருகிறது .தொழில் முனைவருக்கான ஆலோசனையும் கடனுதவியும் செய்து வருகிறது.கொடுக்கபட்டகடன் தொகையில் 25 சதவீதம் மானியாமாக தருகிறது.காயல்பட்டினத்தில் நமது இளைஞ்சர்கள் புதிய தொழில் மற்றும் புதிய உற்பத்தியை துவங்குவதில் பேராவலாகஉள்ளார்கள்.
ஆனால் முறையான முதலீடு இல்ல்லாததால் பல தொழில்களில் அனுபவம் இருந்தும் வளைகுடாவில் தங்கள் வாழ்க்கையை கரைத்து கொண்டு இருக்கிறார்கள்.இந்த நிலையை மாற்றும் நல்ல நோக்கிலும்,
இளைஞ்சர்களுக்கு புதிய உந்துதலை ஏற்படுத்தும் நோக்கிலும் தொழில்முனைவருக்கான முகாம் ஏற்பாடு செய்தோம்.இளைஞ்சர் ஐக்கிய முன்னணியில் நடந்த இந்த முகாமில் மாவட்ட தொழில் மைய அதிகாரிகளே நேரிடையாக வந்து விளக்கவுரையும்,தொழில் முனைவருக்கான சந்தேகங்களுக்கு தெளிவான தீர்வும் வழங்கப்பட்டது.தொழில் முனைவோர் கடனுதவி பெறுவதற்கான விண்ணப்பமும் அங்கேயே வழங்கப்பட்டது.
இந்த முகாமை ஸ்காட் தொண்டு நிறுவனம் மற்றும் சுலைமானியா நிறுவனங்கள்,சமூக ஆர்வலர் புஹாரி,நானும் இணைந்து இந்த முகாமை நடத்தினோம்.எதிர்பார்த்ததைவிட மிகவும் பயனுள்ளதாக வெற்றிமுகாமாக அமைந்தது.தொழில் முனைவோர் திரளாக கலந்து கேள்வி பதில் நிகழ்ச்சியில் ஆக்க பூர்வமான விசயங்களை கேட்டு பயன்பெற்றனர்.
காயல்பட்டினத்தில் முதல்முறை நடந்த தொழில் முனைவோர் முகாம்
என்பது குறிப்பிடதக்கது.
தொழில் முனைவோர் உறுதிப்பாடுடன் தகுந்த தகுதியுடன் இருந்தால் அவர்களுக்கு மாவட்ட அலுவலகத்தை நேரிடையாக தொடர்பு கொண்டு கடனுதவி பெற்று தர ஆவலாக உள்ளோம்.ஆர்வம் உள்ளவர்களுக்கு தொடர்ந்து வழிகாட்ட தயாராக உள்ளோம்.எனவே விருப்பம் உள்ளவர்கள் எங்களை அணுகுமாறு வேண்டிகொள்கிறோம்.
இறைவன் நம் முயற்சிகளை வெற்றியாக்குவனாக.இந்த முகாமின் செய்திகளை அழகிய புகைப்படங்களுடன் விரிவான செய்தி வெளியிட்ட காயல்பட்டினம் இணையதளத்துக்கு இதயமார்ந்த நன்றிகளை தெர்வித்து கொள்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross