தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் சார்பில், தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம், இன்று (டிசம்பர் 10) புதன்கிழமை காலை 11.00 மணியளவில், காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) நூலக வளாகத்தில் நடைபெற்றது.
சொளுக்கு எஸ்.எம்.கபீர் தலைமை தாங்கினார். மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். ஏ.எல்.முஹம்மத் நிஜார் முகாம் அறிமுகவுரையாற்றினார்.
தூத்துக்குடி மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் டீ.மாயத்தேவர் இம்முகாமில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியதோடு, தொழில் முனைவு, பல்வேறு தொழில்களுக்கான அரசின் கடனுதவித் திட்டங்கள் குறித்த - பங்கேற்றோரின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்துப் பேசினார்.
நிறைவில் அவருக்கு, இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் அதன் முன்னாள் தலைவர் எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் என்ற டீ.எம். சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார். நன்றியுரைக்குப் பின், துஆ - ஸலவாத்துடன் முகாம் நிறைவுற்றது. இதில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழில் முனைவோர் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர்.
இம்முகாமை, ஸ்காட் தொண்டு நிறுவனம், காயல்பட்டினத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஆகியன இணைந்து நடத்தின. ஸ்காட் அமைப்பின் மனோகரன், தபராஜ், தனியார் நிறுவன உரிமையாளர்களான எஸ்.ஏ.இஸ்மாஈல், எஸ்.ஏ.செய்கு சுலைமான், சமூக ஆர்வலர்களான எம்.புகாரீ, ஏ.எல்.முஹம்மத் நிஜார் ஆகியோர் முகாமுக்கான ஏற்பாட்டுப் பணிகளைச் செய்திருந்தனர்.
காயல்பட்டினத்தில் முதன்முறையாக இம்முகாம் நடத்தப்பட்டுள்ளதாகவும், பங்கேற்றோருக்கு இது மிகுந்த பயனளித்துள்ளதாகவும், தகுதியுள்ள தொழில் முனைவோருக்குத் தேவையான அனைத்து வழிகாட்டல்கள் மற்றும் கடனுதவிகளைப் பெறுவதற்கான ஒத்துழைப்புகளையும் வழங்க தாம் ஆயத்தமாக உள்ளதாகவும் முகாம் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவல்:
முகாம் ஏற்பாட்டுக் குழுவின் சார்பில்...
M.புகாரீ
இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |