பாசிப்பட்டினத்தில் அடங்கியிருக்கும் மஹான் சர்தார் நெய்னா முஹம்மத் ஸாஹிப் வலிய்யுல்லாஹ் அவர்கள் நினைவாக, காயல்பட்டினம் கோமான் ஜமாஅத் சார்பில் ஆண்டுதோறும் முஹர்ரம் முதல் நாள் முதல் 14ஆம் நாள் வரை கந்தூரி நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழமை.
அந்த அடிப்படையில் இவ்வாண்டு நிகழ்ச்சிகள் 25.10.2014 சனிக்கிழமை மாலையில் கொடியேற்றத்துடன் துவங்கி, 08.11.2014 சனிக்கிழமையன்று கந்தூரி நிகழ்வுகளுடன் நிறைவுற்றது.
கந்தூரி நிகழ்ச்சியை முன்னிட்டு அன்றாடம் அதிகாலையில் கத்முல் குர்ஆன் ஓதி மஹான் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டது. மாலையில் மவ்லித் மஜ்லிஸும், இஷா தொழுகைக்குப் பின் மார்க்க சொற்பொழிவும் நடைபெற்றன.
கந்தூரி நாளான 08.11.2014 சனிக்கிழமையன்று இரவில் மவ்லித் மஜ்லிஸ் நடைபெற்றது. அன்றிரவு, அலங்கரிக்கப்பட்ட யானை, ஜோடிக்கப்பட்ட குழந்தைகளுடன் பல்லக்கு, சிலம்பாட்டம், தீப்பந்த விளையாட்டு ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய ஊர்வலம் நடத்தப்பட்டது.
இந்த ஊர்வலத்தையொட்டி வான வேடிக்கைகளும், பேண்டு வாத்திய முழக்கங்களும் இடம்பெற்றன. இதனை நகரின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பெருந்திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர். பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. அன்று 22.00 மணிக்கு இஸ்லாமிய இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது.
கந்தூரி விழா ஏற்பாடுகளை, கந்தூரி கமிட்டி தலைவர் எம்.எச்.முஹம்மத் காஸிம், துணைத்தலைவர் எஸ்.டி.மொன்னா அஹ்மத், செயலாளர் என்.முஹம்மத் காஸிம், துணைச் செயலாளர் எம்.பி.பீர் முஹம்மத், பொருளாளர் ஜெ.ஏ.செய்யித் முஹம்மத், துணைப் பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், ஸ்டோர் கீப்பர்களான பாபுகான், கே.எம்.ஹாஜி அலீ ஆகியோர் ஒருங்கிணைப்பில், கோமான் ஜமாஅத்தினர் செய்திருந்தனர்.
கோமான் தெரு கந்தூரி குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |